வட மாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவர் தினம்: மத்திய அரசுக்கு வைரமுத்து, கி. வீரமணி நன்றி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2014

வட மாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவர் தினம்: மத்திய அரசுக்கு வைரமுத்து, கி. வீரமணி நன்றி

வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் என அறிவித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கவிஞர் வைரமுத்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சனிக்கிழமை அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

கவிஞர் வைரமுத்து: அடுத்த ஆண்டு முதல் வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு பெருமகிழ்ச்சி தருகிறது. மாநிலங்களவையில் இந்தக் கோரிக்கையை முன்வைத்த தருண் விஜய், ஒப்பதல் அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருவள்ளுவர் திருநாள் என்பது அவரது உருவத்தை கொண்டாடுவது அல்ல. மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைக் கற்றுத் தெளிந்து வடநாட்டுப் பிள்ளைகளும் வாழ்வில் மேம்பட வேண்டும். அதற்கான வடக்கு வாசல் இப்போது திறந்துள்ளது. இது முதல் வெற்றி என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோரும் நாடு முழுவதும் திருவள்ளுவர் தின அறிவிப்புக்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி