PG-TRB:முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி என்ன ?விண்ணப்பதாரர்கள் மத்தியில் குழப்பம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2014

PG-TRB:முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி என்ன ?விண்ணப்பதாரர்கள் மத்தியில் குழப்பம்.


முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, என்ன என்பது குறித்து,ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிடாததால், விண்ணப்பதாரர்கள் மத்தியில், குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில், காலியாக உள்ள, 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இம்மாதம் 7ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. ஜன., 10ம் தேதி, எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது.இதற்காக, இம்மாதம் 10ம் தேதி முதல், 26ம் தேதி வரை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம், விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.

26ம் தேதி மாலை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, வரும் 26ம் தேதி, மாலை 5:00 மணிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், நேரில் ஒப்படைக்க வேண்டும். அதன்படி, விண்ணப்பங்களை ஆயிரக்கணக்கானோர் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர்.இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, முதுநிலை பட்ட மேற்படிப்புடன், பி.எட்., படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும் என, தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.ஆனால், முதுநிலை படிப்பு மற்றும் பி.எட்., படிப்புக்கு, இணையான கல்விதகுதிகள் எவை எவை என்ற தகவலை, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாக தெரிவிக்கவில்லை என, முதுநிலை கல்வி படித்தவர்கள் புகார் கூறியுள்ளனர்.

தேர்வு வாரியம்:

இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் சிலர் கூறியதாவது:இணையான கல்வித்தகுதி உள்ள பட்டப் படிப்பு என்ன என்பதே, எங்களுக்கு தெரியாமல் உள்ளது. இதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடவில்லை. அதனால், குழப்பம் நீடிக்கிறது.நாங்கள் பல்வேறு நிலையில் குழம்பி, முதன்மை கல்வி அலுவலகங்களை அணுகும் போது, சரியான பதில் அங்கும் கிடைக்கவில்லை. இதனால், இந்த தேர்வுக்கு, கல்வித்தகுதி பெற்றிருக்கிறோமா என தெரியாமலேயே, விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அளித்துவருகிறோம்.அறிவிப்பு வெளியிடும் போதே, தேர்வுக்கு இணையான படிப்புகள் என்ன என்பதை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு வெளியிடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள தால், எங்களுக்கு விண்ணப்ப படிவத்திற்கான பணம் வீணாகுமோ என்ற கவலையுடனே விண்ணப்பித்து உள்ளோம்.எனவே, உடனடியாக முதுநிலை ஆசிரியர் தேர்விற்கு, இணையான கல்வி தகுதி என்ன என்ற அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

17 comments:

  1. Vijayakumar sir aided schools join pannina future la other school transfer try pannalama

    ReplyDelete
  2. Same doubt. Inaiku counselling pona friends.. Nalapadiya munjutha.. Enala ketanga. . Order kuthutangala

    ReplyDelete
  3. Eappa schoola join pannanum friends?today counsellng attern pannavanga.tell me pls.......

    ReplyDelete
  4. Adw list eppa varum ethum news unda nanbargaley

    ReplyDelete
  5. Sir,
    I completed Msc Computer science with Bed Computer science ..may i apply for this post..

    ReplyDelete
  6. Hai good evng friends.ADI DIRAVIDAN SIR enka irukeega?kalviseithiku vanga

    ReplyDelete
  7. Today counselling sendra friends pls reply wat happened

    ReplyDelete
  8. Blit, MA (tamil), Dted iruntha pg trb elutha eligible ah friends

    ReplyDelete
    Replies
    1. not eligible mam,blit,or,tamil degree and b,ed eligible.

      Delete
    2. இதே சந்தேகம் தான் எனக்கும்

      Delete
  9. Nan B.sc & M.sc statistics with B.Ed. bsc stats = bsc maths go erukku. Ennala pg trb apply pannamudiyuma. Eligible erukka plz sollunga sir

    ReplyDelete
  10. Nan B.sc & M.sc statistics with B.Ed. bsc stats = bsc maths go erukku. Ennala pg trb apply pannamudiyuma. Eligible erukka plz sollunga sir

    ReplyDelete
  11. Please friends anyone clarify? What are equal degrees?

    ReplyDelete
    Replies
    1. Pls refer admission guidelines of tnteu for b.ed and m.ed. this is issued based on ten govt GOs

      Delete
  12. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி