பாரதியார் பல்கலை: B.Ed-இளங்கலை கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2014

பாரதியார் பல்கலை: B.Ed-இளங்கலை கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. பாரதியார்பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2015-2017ம் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் பல்வேறு துறைகளுக்கு சேர்க்கை அறிவிப்புவெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி:இளங்கலை அல்லது முதுகலையில் (தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்,தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய படிப்பில் ஏதுதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:கையேடு மற்றும் விண்ணப்பங்களை தபால் மூலம் பெற ரூ.500 வரைவோலை அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு மார்ச் 29ல் நடைபெறுகிறது.

விண்ணப்பம் கிடைக்கும் மையங்கள்:
கோவை, சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மையங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி