அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி: பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வர வாய்ப்பு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2014

அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி: பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வர வாய்ப்பு?


வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம் வகுப்புமாணவர்களுக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த திட்டம் அமலுக்கு வந்தால்,பொதுத்தேர்வு முறையில் மாற்றம் உட்பட பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, கல்வி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

கிரேடு முறை:

கடந்த, 2012 - 13ம் கல்வி ஆண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை நடைமுறைக்கு வந்தது. இத்திட்டப்படி, சமச்சீர் கல்வித்திட்ட பாடத்தை மூன்றாக பிரித்து, ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும், அக மற்றும் புற மதிப்பீட்டில், மாணவரின் தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அக மதிப்பெண்படி, மாணவரின் தனித்திறனுக்கு, 40 மதிப்பெண், புற மதிப்பீடான எழுத்துத்தேர்வுக்கு, 60 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.மொத்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்து, மாணவர்களுக்கு, 'கிரேடு' முறை பின்பற்றப்படுகிறது. முப்பருவ திட்டம் அமலுக்கு வரும் போது படிப்படியாக, 2013 - 14ம் கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு மற்றும், 2014 - 15ம் கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி.,க்கு நீட்டிப்பு செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், நடப்பு கல்விஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி.,க்கு முப்பருவ கல்வி அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. முக்கிய காரணமாக, பொதுத்தேர்வு முறையை மாற்றியமைக்கவேண்டிய கட்டாயம், கல்வித்துறைக்கு ஏற்பட்டது. மேலும், மாநில கல்விக்குள் வராத புதிய பாடத்திட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள், பொதுத்தேர்வு முறை அமலில் உள்ளதால், உடனடியாக மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பு கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி., மாணவருக்கு, பழைய பாடத்திட்டத்தின் படியே, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கழகம் சார்பில், புத்தகங்கள் சப்ளை செய்யப்பட்டு, பழைய முறையிலான பொதுத்தேர்வும் நடத்தப்படும்.

ஆய்வு:

இந்நிலையில், வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., மாணவருக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சியில் இயங்கும் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி துறை அதிகாரிகள், தங்களது ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளனர்.

மதிப்பீடு செய்வதில் சிக்கல்

தமிழக அரசின், மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை அதிகாரிகள், வரும் கல்வியாண்டில், முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முப்பருவ கல்வித் திட்டத்தில், பாடத்திட்டத்தை மூன்றாக பிரித்து, தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பீடு செய்யப்படுகிறது. அந்த முறையை, பொதுத்தேர்வு திட்டத்தில் உள்ள, எஸ்.எஸ்.எல்.சி.,க்கு கொண்டு வந்தால், மாணவர்களை மதிப்பீடு செய்வதில் சிக்கல் ஏற்படும்.

மேலும், மூன்று தேர்வுகளையும் சேர்த்து, பொதுத்தேர்வு நடத்துவது போல் நடத்தி, முடிவு வெளியிட வேண்டும். இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' திட்டம் அமலில் இருப்பதால், முக்கிய படிப்பான எஸ்.எஸ்.எல்.சி., படிப்பை, பொதுத்தேர்வாக நடத்தினால் தான், மாணவரை சரியான மதிப்பீடு செய்ய முடியும். இல்லையென்றால், மாணவரின் கல்வித்தகுதி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

1 comment:

  1. The CCE method must be implemented for up coming 2015-16 as they under went cce method for the past eight years. Sudden changes in this methodology will affect the future students.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி