பள்ளிகளில் டிச.,10ல் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2014

பள்ளிகளில் டிச.,10ல் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் போராட்டம்


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டிச.,10ல் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தவுள்ளதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
மதுரையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் கூறியதாவது:

சமீப காலமாக மாணவர்கள் மற்றும் வெளி ஆட்களால் பள்ளி ஆசிரியர்கள் மீது தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த பயத்துடன் பணியாற்ற வேண்டியுள்ளது.இதுகுறித்து பல்வேறு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அரசிடம் முறையிட்டும்,எவ்வித பயனும் இல்லை. ஆசிரியர்கள் தவறு செய்யும்பட்சத்தில் அவர்கள் மீதுஅரசு கடும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் தவறு செய்யாத ஆசிரியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடக்கின்றன. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு டாக்டர்களுக்கு உள்ளது போன்று பணிப் பாதுகாப்பு சட்டம் வேண்டும். இதை வலியுறுத்தி டிச.,10 அனைத்து ஆசிரியர்களும் கறுப்பு பேட்ஜ் அணிந்து வகுப்பு நடத்தவும், மாலை 5 மணிக்கு பள்ளிகள் முன் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் அனைத்து ஆசிரியர் சங்கங்களும் பங்கேற்கின்றன என்றார்.

13 comments:

 1. தேர்வுப்பட்டியல்

  ReplyDelete
 2. Replies
  1. கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம் நண்பர்களே

   Delete
  2. கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம் நண்பர்களே

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி