குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி டிச.15-இல் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2014

குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி டிச.15-இல் தொடக்கம்

குடும்ப அட்டையின் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதற்கான உள்தாள் ஒட்டும் பணி, வரும் 15-ஆம் தேதி தொடங்கப்படுகிறது. குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று உள்தாளை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் குடும்ப அட்டையின் காலத்தை நீட்டிக்கும் வகையில் உள்தாள் ஒட்டப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டைப் போன்றே, இந்த ஆண்டும் (2015) குடும்ப அட்டையின் காலத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டப்படும் என அறிவித்துள்ளது.

எப்போது தொடங்கும்? குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும் வரும் திங்கள்கிழமை (டிச. 15) முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியது:

திங்கள்கிழமை முதல் குடும்ப அட்டையில் உள்தாள்களை ஒட்டுவதற்கு, கடை பணியாளர்களுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 75 முதல் 125 அட்டைதாரர்களுக்கு உள்தாள்களை வழங்கும் வகையில், அவர்களுக்கான குடும்ப அட்டை எண்கள் நியாய விலைக் கடைகளின் பெயர் பலகையில் ஒட்டப்படும். உள்தாள்

ஒட்டும் பணியுடன் சேர்த்தே அத்தியாவசியப் பொருள்களையும் விநியோகிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, காலை அல்லது மாலை வேளையில் வசதிக்கேற்றபடி நியாய விலைக் கடைகளில் பொருள்களும் விநியோகம் செய்யப்படும். சுமார் 15 நாள்களுக்குள் உள்தாள் ஒட்டும் பணிகளை முடிக்க நியாய விலைக் கடை பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

யார் செல்லலாம்? குடும்பத் தலைவரோ அல்லது குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்களோ உள்தாள் ஒட்டுவதற்காக கடைகளுக்குச் செல்லலாம். குடும்பத் தலைவரைத் தவிர்த்து வேறு யாரேனும் செல்ல விரும்பினால், அவர்கள் 18 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். அவர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு உள்தாள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி