வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2014

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்க, மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தங்களது பதிவைப் புதுப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பைப் பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்புப் புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்தச் சலுகையைப் பெறவிரும்பும் மனுதாரர்கள் மூன்று மாதங்களுக்குள் அதாவது அடுத்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் பதிவஞ்சல் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் http:tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாக பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி