அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் 1093 பேர் நியமிக்கப்படஉள்ளனர். அதற்காக சான்றிதழ் சரிபார்த்தல் நடத்தப்பட்டது. பின்னர் கூடுதல் தெளிவுரை முகாம் நடத்தப்பட்டது.
மேலும் தொலைதூர கல்வி மூலம் எம்.பில். படித்தவர்களுக்கும், கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவத்திற்கும் கடந்த ஜூலை மாதம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டது.இந்த சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் சிறப்பு முகாம்களில் பணிநாடுநர்கள் அளித்த விவரங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தகுதி உள்ள பணிநாடுநர்களை 1:5 விகிதாச்சாரத்தில் இனசுழற்சி அடிப்படையில் 12 பாடப்பிரிவுகளுக்கு 15-ந் தேதி முதல்19-ந் தேதி வரை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் நேர்காணல் நடைபெறுகிறது.12 பாடப்பிரிவுகளாக பொருளியியல், புவியியல், வணிகவியல், வணிகவியல்(கணினி பயன்பாடு), வணிகவியல் (ஐ.பி.), வணிகவியல் (இ.காம்) வணிகநிர்வாக இயல், வணிகமேலாண்மை, தமிழ், அரசியல் அறிவியல், பொதுநிர்வாகம், உடற்கல்வி ஆகியவற்றிற்கு நேர்காணல் நடக்கிறது.இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி