162 பயணிகளுடன் ஏர் ஏசியா விமானம் மாயம்; சிங்கப்பூர் சென்ற போது விபத்தில் சிக்கியதா ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2014

162 பயணிகளுடன் ஏர் ஏசியா விமானம் மாயம்; சிங்கப்பூர் சென்ற போது விபத்தில் சிக்கியதா ?

இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா கியூ. இசட் 8501விமானம் புறப்பட்ட 42 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. தற்போது விமானம் எங்கே இருக்கிறது என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விமான கோளாறு காரணமா அல்லது பயங்கரவாதிகள் சதி ஏதும் இருக்குமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஏர் ஏசியா கியூ இசட் 8501 ( மலேசியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது ) சுர்பயா விமான நிலையத்தில் இருந்து காலை 6. மணியளவில் இந்த விமானம் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது. சிறிது நேரத்தில் விமானம் மாற்று பாதையில் திரும்பியது தெரிய வந்தது. காலை 7.24 க்கு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விமானத்தில் 149 இந்தோனேஷியர்கள், 3 கொரியர்கள், 1 சிங்கப்பூரியன், 1 பிரிட்டன் , 1 மலேசியன், 7 விமான ஊழியர்கள் இருந்துள்ளனர். இந்தியர்கள் யாரும் இல்லை.



ஏர் ஏசியா பேஸ்புக் கவலை ; இது குறித்து ஏர் ஏசியா பேஸ்புக்கில் , இந்த விமானம் காலை 8. 30க்கு சிங்கப்பூர் ஷாங்கி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியது. துரதிஷ்டவசமாக 162 பேருடன் கிளம்பிய விமானம் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இது பெரும் கவலை அளிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

எமர்ஜென்ஸி தொலைபேசி எண் : பயணிகள் நிலை குறித்து அறிந்து கொள் எமர்ஜென்ஸி தொலைபேசி எண்: +622129850801 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது 3 வது மாயமாகும் விமானம் : கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலேசிய விமானம் எம்.எச்-370 சிங்கப்பூர் புறப்பட்ட போது 239 பயணிகளுடன் மாயமானது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி காணாமல் போன விமானத்தின் ஒரு பாகம் கூட இதுவரை கண்டு பிடிக்க முடியாமல் போனது. தொடர்ந்து உக்ரைன் அருகே பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தியதாக ஒரு விமானம் ஒரு மாயமானது. இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு ஏர் ஏசியா விமானம் மாயமாகி இருக்கிறது. இந்த ஆண்டில், பெரும் பயணிகளுடன் விமானம் மாயமாகும் 3 வது சம்பவம் .

விபத்தில் சிக்கியதா ? : ஏர் ஏசியா கியூஸ் 8501விமானம் புறப்பட்ட 42வது நிமிடத்தில் ஜாவா கடல் பகுதியில் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. பெலிடங் என்ற தீவு பகுதியில் விமானத்தின் நொறுங்கிய பாகம் கிடந்ததாக முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. ஆனால் இதனை ஏர் ஏசிய விமானம் இது வரை உறுதி செய்யவில்லை.


மோசமான வானிலை காரணம் : இந்தோனேஷியா விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தோனேஷிய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜாவா கடல் பகுதியில் விமானம் பயணித்த போது, மோசமான வானிலை மற்றும் மேககூட்டம் சூழ்ந்ததாலும் விமானம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாவா கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் இந்தோனேஷிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி