2.91 லட்சம் இடைநிற்றல் மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2014

2.91 லட்சம் இடைநிற்றல் மாணவர்கள்

இரு ஆண்டுகளில், மாநிலத்தில், 2.91 லட்சம் மாணவர்கள், பள்ளி படிப்பில் இருந்து, பாதியிலேயே சென்று உள்ளனர். அரசு பள்ளிகளில், 2 லட்சத்து 12 ஆயிரத்து 234 மாணவர்களும்; தனியார் பள்ளிகளில், 74 ஆயிரத்து 198 மாணவர்களும், பள்ளி படிப்பை விட்டு, பாதியிலேயே சென்றுள்ளனர். இத்துடன், 2012 - 13, 2013 - 14 கல்வியாண்டில், பள்ளிகளில், மாணவர்களை விட, மாணவியரின் எண்ணிக்கை, 2.54 லட்சம் குறைவாக உள்ளது. அதாவது, கல்வி கற்பதிலும், பெண் பிள்ளைகளின் எண்ணிக்கையும் கூட, கணிசமாக குறைந்துள்ளது என்று, இந்தியா கவர்னஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இயக்குனர் வீணா ராஜண்ணா கூறினார்.

நிருபர்களிடம், அவர் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரை, 53.51 லட்சம் இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, அவர்கள், மூன்றாம் வகுப்பிலிருந்து, ஏழாம் வகுப்புக்கு வருவதற்குள், 50.64 லட்சமாக குறைந்துள்ளது. மொத்தமுள்ள, 224 சட்டசபைத் தொகுதிகளில், 113 தொகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளியை விட்டு விலகிஉள்ளனர். குறிப்பாக, சுராபுரா, ஹூப்ளிதார்வாட், சித்தாபுரா, கலபுர்கி வடக்கு, பெங்களூரு சாந்தி நகர், குஷ்டகி, சேடம், முத்தேபிஹளதள்ளியில், 5,000 - 8,000 மாணவர்கள் பள்ளியிலிருந்து விலகிஉள்ளனர். இதற்கிடையில், அரசு பள்ளிகளிலிருந்து, தனியார் பள்ளிகளுக்கு செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த, 2008 - 09ல், தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 35 சதவீதமாக இருந்தது. தற்போது, 45 சதவீதமாக உயர்ந்துள்ளது. கல்வி உரிமை சட்டத்தின்படி, பள்ளிகளில், பிற்படுத்தப்பட்ட பிள்ளைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற, விதிமுறை உள்ளது; 69 சட்ட சபைத் தொகுதிகளில், அதுபோன்ற, எந்த பயிற்சியும் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி