குரூப் 4 தேர்வு: விண்ணப்பதாரர் விவரங்கள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2014

குரூப் 4 தேர்வு: விண்ணப்பதாரர் விவரங்கள் வெளியீடு

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வி.சோபனா திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 21-ஆம் தேதியன்று குரூப் 4 தேர்வை நடத்துகிறது. 4 ஆயிரத்து 963 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தவுள்ளது. இந்தத் தேர்வுக்கென 13 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணைப் பதிந்து, விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும் அதன் விவரம் இணையதளத்தில் இல்லாவிட்டால் அந்த விண்ணப்பதாரர்கள், பணம் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் தேர்வாணையத்தின் முகவரியான contacttnpsc@gmail.com-க்கு, வரும் 5 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரரின் பெயர், தொகுதி 4 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான விண்ணப்பப் பதிவு எண், விண்ணப்பம், தேர்வுக் கட்டணம் (ரூபாய்), கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலகம், இந்தியன் வங்கி), வங்கிக் கிளை, அஞ்சலக முகவரி ஆகிய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி