எச்.ஐ.வி. கண்களையும் பாதிக்கும் மருத்துவர்கள் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2014

எச்.ஐ.வி. கண்களையும் பாதிக்கும் மருத்துவர்கள் எச்சரிக்கை





எச்.ஐ.வி. மூலம் ஏற்படும் எய்ட்ஸ் நோயானது கண்களையும் பாதிக்கும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக எய்ட்ஸ் தினம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் பாஸ்கர் பேசியது:

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாகச் சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். அவர்கள் சிகிச்சைகள் மேற்கொள்ளத் தவறினால் ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்படுவது போன்று கண்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளாவிட்டால் கண் இமை, கருவிழி உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்படும். பாதிப்புகளையும் அலட்சியப்படுத்தினால் இறுதியில் பார்வை இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே எச்.ஐ.வி. நோயாளிகள் தங்களுக்கான

சிகிச்சைகளை முறை தவறாது எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சிகிச்சைகளே உடலின் அனைத்து உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்றார் அவர்.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி