9300-4200 வழக்கு விசாரணைக்கு எட்டியது !!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2014

9300-4200 வழக்கு விசாரணைக்கு எட்டியது !!!


நேற்று இடைநிலை ஆசிரியர்கள் 9300-4200 ஊதிய வழக்கு எண்:4420/2014 விசாரணைக்கு 25 வது வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது அரசுதரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை நீதியரசர் consideration என்று (மனுவை பரிசீலயுங்கள்) என்றுஆணை பிறப்பிக்கலாமா என்று நமது வழக்கறிஞரிடம் கோரினார்கள்.
நமது தரப்பு மூத்த வழக்கறிஞர் திரு ; சி.செல்வராஐ் அவர்கள் , எதுவாயினும் நீதி மன்றத்தில் அரசின் பதில் மனு பெற்று,நீதிமன்றத்திற்குள் முடிவு செய்யவேண்டும் என்றும் எங்களுக்கு இறுதி விசாரணை நடத்தி தீர்ப்பை தாருங்கள் என்று கோரிக்கை வைத்தார் அதன் அடிப்படையில் அரசுக்கு கால அவகாசம் 15 நாட்கள் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.அரசு தரப்பில் இதை அவசர வழக்காக விசாரிக்க தேவையில்லை என்ற கருத்து முன் வைக்கப்பட்டது ஆனால் நமது தரப்பில் ஊதிய குழு அமுல் படுத்தி 5 ஆண்டுகள் ஆகிவிட்டன அடுத்த ஊதிய குழுவும் வரப்போகிறது என்று கேட்டுக்கொண்டார் அதை ஏற்ற நீதிமன்றம் அக்கருத்தை நிராகரித்தார்.

எனவே நமது வழக்கு மீண்டும் கால அவகாசம் முடிந்தவுடன் விசாரணைக்கு வரும்.!!!! மாவட்ட மாறுதலில் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்தை போல் இதிலும் வெற்றி பெறுவோம்.

உண்மையை சொல்வோம் !!!

சொல்வதை செய்வோம் !!!

SSTA

4 comments:

 1. ஆசிரியர் சமுதாயத்தை அலட்சியப்படுத்திய எந்தவொரு ஆட்சியும் மீண்டும் அமைந்த சரித்திரம் இல்லை .

  இப்போது இருக்கும் ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று ?

  ReplyDelete
 2. வாக்குறுதிகள் வழங்கப்படுவது
  தேர்தல் நேரத்தில் வாக்குகள்
  பெற்று ஆட்சி அதிகாரத்தைப்
  பெறுவதற்கு மட்டுமே என்பது இந்த அரசின் அறிவிக்கப்படாத
  கொள்கை

  ReplyDelete
 3. இடைநிலை ஆசிரியர் ஊதிய
  விகிதம் மாற்றப்படும் ,CPS ரத்து செய்யப்படும் என் பொய்யான
  வாக்குறுதிகளை வழங்கி நம்
  வாக்குகளைப் பெற்று இப்போது
  நம்மை ஏமாற்றுகிறார் .காலம்
  வரும்.புரியவைப்போம்

  ReplyDelete
 4. அனைத்து தரப்புகளையும் திருப்தி படுத்துவது தான் நல்லரசு.ஆனால் அது எவ்வரசாலும் இயலாது.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி