சென்னையில் உ.வே.சாமிநாத ஐயர் வாழ்ந்த வீடு இடிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2014

சென்னையில் உ.வே.சாமிநாத ஐயர் வாழ்ந்த வீடு இடிப்பு

சென்னையில் தமிழ் தாத்தா என புகழப்படும் .வே.சாமிநாத ஐயர் வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டுள்ளது.2012 ம் ஆண்டு இவ்வீட்டின் உள்பகுதி இடிக்கப்பட்டதற்கு தமிழறிர்ஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததுடன், இந்த வீட்டை நினைவு இல்லமாக அரசு பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

1903ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்ற வந்தபோது, திருவல்லிக்கேணியில் 20 ரூபாய் வாடகையில் திருவட்டீஸ்வரன் பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் வசித்தார். அந்த வீட்டையே பின்னர் விலைக்கு வாங்கி, தனது ஆசிரியர் நினைவாக வீட்டுக்கு தியாகராச விலாசம் என்று பெயர் வைத்தார். உறவினர்களின் பராமரிப்பில் இருந்த இந்த வீடு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 2012 செப்டம்பரில் வீட்டின் உள்பகுதி இடிக்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கட்டிட இடிப்புப் பணி தடைபட்டது. .வே.சா வாழ்ந்த வீட்டை தமிழக அரசு அவரது நினைவு இல்லமாகப் பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட்து. இந்நிலையில் அந்த வீடு இடிக்கப்பட்டுள்ளது.


1 comment:

  1. Tamilan than thalayil man alli poteannnnn namellam erounthou enna seayaa

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி