Dec 2, 2014
Home
kalviseithi
தேர்வு எழுதாத மாணவிக்கு பட்டம் வழங்கிய காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்
தேர்வு எழுதாத மாணவிக்கு பட்டம் வழங்கிய காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்
'தேர்வே
எழுதாத சென்னை மாணவிக்கு வழங்கிய
மதிப்பெண் பட்டியல், தற்காலிக சான்றிதழ்களை திரும்ப அனுப்பக்கோரி', காரைக்குடி
அழகப்பா பல்கலை உத்தரவிட்டுள்ளது.
காரைக்குடி
அழகப்பா பல்கலை தொலை நிலை
கல்வியின் 214 கல்வி மையங்கள் மூலம்
இந்தியா, வெளிநாடுகளைச் சேர்ந்த 1.20 லட்சம் மாணவர்கள் கல்வி
பயின்று வருகின்றனர். கடந்த 2004ல் இளங்கலை தமிழ்
இலக்கியம் பாடப்பிரிவில் சேர்ந்தார் சென்னை மாணவி ஒருவர்.
ஆனால் இப்பாடப்பிரிவின் 18 பாடங்களில் எந்த ஒரு பாடத்திற்கும்
தேர்வு எழுதவில்லை. பத்தாண்டுகளை கடந்த நிலையில் கடந்த
2013, டிசம்பரில் நடந்த தேர்வில் அம்மாணவி
தேர்ச்சி பெற்றதாகக் கூறி, தொகுப்பு மதிப்பெண்
பட்டியல், புரோவிஷனல் சர்டிபிகேட்டை மாணவியின் வீட்டுக்கே அனுப்பி வைத்துள்ளது பல்கலை.
எப்படியோ
தவறை அறிந்த பல்கலை அதிகாரிகள்
கடந்த நவ.,26ல் மாணவி
பெற்ற மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழை உடனே
திருப்பி அனுப்புங்கள் என கடிதம் அனுப்பியுள்ளனர்.
இப்பல்கலையில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் 26 மதிப்பெண் பெற்ற மாணவர் 62 மதிப்பெண்ணுடன்
முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தது, பல்கலை தேர்வின் வினாத்தாளில்
நடந்து முடிந்த தேர்வின் வினாக்களை
கேட்டது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள்
எழுந்தன. இந்நிலையில் இப்படி ஒரு புதிய
சர்ச்சை எழுந்துள்ளது.
Recommanded News
Related Post:
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
திண்டுக்கல் மாவட்டத்தில் இடைநிலை பணியிடம் காலியாக உள்ளது தொடர்புக்கு veldocuments@gmail.com
ReplyDeleteUnga phone number sollunga sir
Delete