அண்ணா பல்கலையில் புது நடைமுறை தொழில் திறன் விருப்ப பாடம் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2014

அண்ணா பல்கலையில் புது நடைமுறை தொழில் திறன் விருப்ப பாடம் அறிமுகம்

அண்ணா பல்கலை யில், வரும் கல்வி ஆண்டு முதல், விருப்ப அடிப்படை தொழிற்பயிற்சி பாடம், சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராமன் தலைமையில், பல்கலை கல்விக் குழு கூட்டம் நடந்தது. இதில், மேற்கண்ட படிப்புகள் உட்பட, பல்வேறு படிப்புகளுக்கு, அனுமதி தரப்பட்டு உள்ளது.
பல்கலையில், பி.இ., - பி.டெக்., படித்து, பணிக்குச் செல்வோர், நிறுவனம் சார்ந்த அனுபவம் இல்லாமல் தவிப்பதால், தொழில் பயிற்சி சார்ந்த, விருப்ப அடிப்படை பாடங்கள் சேர்க்கப்படுகின்றன.நான்கு ஆண்டு பட்டம் பெறும் மாணவர்கள், மதிப்பு அடிப்படையில், 184 மதிப்பு (கிரெடிட்) பெறுகின்றனர். விருப்ப அடிப்படை பாடங்கள் மூலம், கூடுதல் மதிப்பு கிடைக்கும்.நான்கு ஆண்டுகளில், எத்தனை விருப்ப பாடங்களை வேண்டுமானாலும் படிக்கலாம். விருப்ப பாடங்கள், 15 மணி நேரம் கற்பிக்கப்படும்.விருப்ப பாடங்களின் மதிப்பு, மதிப்பெண் பட்டியலில் இருந்தாலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் சேராது.அண்ணா பல்கலை சார்ந்த, கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., அழகப்பா பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் ஆகியவற்றில், இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மற்ற இணைப்புக் கல்லூரிகளில் துவக்க, ஒப்புதல் அளிக்கப்படும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கிரெடிட் (மதிப்பு) என்றால் என்ன?

பள்ளிகளில் மதிப்பெண்களுக்கு பதில், கிரேடு முறை வந்தது போல், உயர்கல்வியில் தற்போது, 'கிரெடிட்' முறை அறிமுகமாக உள்ளது. விருப்ப அடிப்படை மதிப்பு திட்டமும் அறிமுகம் ஆகிறது.
முதன்மை பாடத்திட்டம், பாட வேளை அடிப்படையில், யூனிட்களாக பிரிக்கப்பட்டு, அதற்கு மதிப்பீடுகள் தரப்படும். இதனுடன், விருப்ப அடிப்படையில் சில பாடங்களை அவசியம் மாணவர் படிக்க வேண்டும். அவற்றிற்கும் மதிப்பீடு வழங்கப்படும்.இந்த அடிப்படையில், ஒரு முதன்மை பாடத்திற்கு, ஒரு ஆண்டிற்கு, 28 கிரெடிட்களும், விருப்ப பாடத்திற்கு, பாடத்தன்மைக்கேற்ப, அதிகபட்சம், மூன்று கிரெடிட்கள் வழங்கப்படுகின்றன.ஆண்டு முடிவில் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலில், கிரெடிட்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்ச்சி பெற்றால் மட்டுமே கிரெடிட் கிடைக்கும்.

1 comment:

 1. வணக்கம் நண்பர்களே மதிய உணவு சாப்டீங்களா சீக்கிரம் சாப்டுங்க

  அப்பதான் வரப்போர மகிழ்ச்சியை கொண்டாட தெம்பு வேணும் ல

  என்ன நான் சொல்ரது

  இன்னும் கொஞ்ச நேரத்துல கல்வி செய்தி கதறனும்

  இன்னைக்கு இரவு TRB WEBSITE திணறனும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி