பென்ஷன் விதிகளின் அடிப்படையில் ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுபென்ஷன் விதிகளின் அடிப்படையில் 1 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் சுகாதாரத்துறையில் அலுவலக உதவியாளராக கடந்த 1987 நவம்பர் 21ல் சந்திரசேகர் பணியில் சேர்ந்தார்.இந்நிலையில், கடந்த 1988 ஜூன் 13ம் தேதி சந்திரசேகர் மரணமடைந்தார். இதையடுத்து, தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக்கோரி சந்திரசேகரின் மனைவி ராதாபாய் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் சுகாதாரத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ஒரு ஆண்டுக்கும் குறைவாக பணியாற்றியவரின் வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம் தர முடியாது என்று கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த சிட்டி சிவில் நீதிமன்றம் ராதாபாய்க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சுகாதாரத்துறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதன்மை கணக்காளர்தாக்கல் செய்த மனுவில், ஓய்வூதிய விதி 49 (2)ல் அரசு ஊழியர் இறந்தால் அவர் ஒரு ஆண்டுக்குகுறைவாக பணியாற்றியிருந்தாலும் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: அரசு ஊழியர் ஒரு ஆண்டுக்கும் குறைவாக பணி செய்த நிலையில் மரணமடைந்தால் அவரது சட்டப்பூர்வ வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க விதிகளில் இடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு 4 வாரங்களுக்குள் ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை முதன்மை கணக்காளருக்குசுகாதாரத்துறை அனுப்ப வேண்டும்.
ஓய்வூதியம் தருவது குறித்து முதன்மை கணக்காளர் முடிவு அறிவித்தவுடன் காலதாமதம் செய்யாமல் மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த ஓய்வூதியம் 1989 முதல் கணக்கிடப்பட்டு 10 சதவீத வட்டியுடன் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிஉத்தரவில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி