மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் இல்லை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2014

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் இல்லை!!!


மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் இல்லை என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, தற்போது 60 ஆக உள்ளது.
அதை 62 ஆக உயர்த்தும் திட்டம் உள்ளதா? என்று டெல்லி மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்டது.அதற்கு மத்திய பணியாளர் நலத்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், ‘அப்படி ஒரு திட்டம் இல்லை’ என்று எழுத்துமூலம் பதில் அளித்தார்.ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.ஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கையை சுமுகமாக நடத்துவதற்கு உதவும் வகையில், ஓய்வு மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை ஒரு புதிய திட்டத்தை தொடங்கி இருப்பதாகவும், முதல்கட்டமாக 2 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கு சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் ஜிதேந்திர சிங் கூறினார்.

பின்னடைவு பணியிடம்

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், ‘ஆதி திராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான பின்னடைவு காலி பணியிடங்களை பொது பிரிவினரைக் கொண்டு நிரப்பும் திட்டம் இல்லை’ என்று பதில் அளித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி