6 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பக்கோரிஅரசு, தனியார் கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2014

6 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பக்கோரிஅரசு, தனியார் கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் போராட்டம்


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளாக பேராசிரியர்கள் நியமனத்தில் மந்த நிலை, ஆசிரியர் அல்லாத ஊழியர் காலி பணியிடம் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தலைதூக்கி உள்ளன.
குறிப்பாகபேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பற்றாக்குறையால் வகுப்புகளில் பாடம் நடத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. பல கல்லூரிகளில் தற்காலிக பணியாளர்கள் உதவியுடன் வகுப்புகள் நடக்கின்றன. மேலும் சுமார் 7 ஆயிரம் பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு (5 ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் ஊதிய மாற்றம்) கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இந்த கோரிக்கைகளுக்காக கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை.இதையடுத்து அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து ஆலோசிப்பதற்காக அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர், தனியார் கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர், கல்லூரி பணியாளர் சங்கத்தினர் மற்றும் மூட்டா சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள்திருச்சியில் இன்று (14ம் தேதி) கூடுகின்றனர். போராட்டம் தொடர்பாக கூட்டமைப்பு பணிகளை தீவிரப்படுத்துவது, டிச.18 அல்லது 19ம் தேதி நெல்லை,திருச்சி, கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட 8 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது,ஜனவரி மாதம் மறியல் போராட்டம் நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி