வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம்செய்ய வேண்டுமென, கல்வி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்- இயக்குநர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் - இயக்குநர் சங்க கூட்டம், மாநில தலைவர் ரவிச்சந்தர் தலைமையில் நடந்தது. தஞ்சை மாவட்டசெயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம், முன்பு போல், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும். புதிய முறையான தேர்வு முறையை அரசு கைவிட வேண்டும். புதிதாக ஆரம்பிக்கப்படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை தொடங்கும்போது, உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று, இரண்டை ஏற்படுத்த வேண்டும்.
உடற்கல்வி ஆசிரியர்கள் எம்.பில். உட்பட அனைத்து உயர்படிப்புக்கும் மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். உடற்கல்வி பாடங்கள் அடங்கிய (சி.சி.முறைப்படி) ""இலவச உடற்கல்வி"" புத்தகங்களை அரசு மூலம் வழங்குவதுடன் தேர்வுகளில் சி.சி. முறைப்படி பாடத்திட்டங்கள் அடங்கிய கேள்வி வினாத்தாள்கள் அனைத்து பள்ளிகளிலும் வழங்க வேண்டும். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (டி.ஐ.பி) பதவி பணிமூப்பின் அடிப்படையில், அனைத்து கல்வி மாவட்டங்களிலும் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி