ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை'ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2014

ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை'ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு


'தமிழகத்தில் துவக்கப்பள்ளி முதல் கல்லுாரி வரையிலான ஆசிரியர்களுக்குபாதுகாப்பு இல்லை'' என துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கூறினார்.
பழநி தொப்பம்பட்டியில் தமிழகஆசிரியர் கூட்டணி சங்க மாநாடு நடந்தது.இதில் பங்கேற்ற துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்திய பொது செயலாளர் அண்ணாமலை கூறியதாவது:

தமிழகத்தில் தொடக்கபள்ளி முதல் கல்லுாரி வரை ஆசிரியர்களுக்கு மாணவர், பெற்றோர், அரசிடமிருந்து எவ்வித பாதுகாப்பும் இல்லை. ஆசிரியர்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்படுகிறது. அதன்மீது போதிய விசாரணை இல்லாமல்அரசு நடவடிக்கை எடுக்கிறது.தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கும் உரிமை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அரசு அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்தியஅரசு திருக்குறளையும், பாரதியார் பிறந்த நாளையும் சிறப்பு செய்துள்ளதற்கு நன்றியை தெரிவிக்கிறோம்,' என்றார்.

தீர்மானம்:

ஆசிரியர்களை முறையின்றி பணிஇடமாறுதல் செய்வதை நிறுத்தவேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் வின்சென்ட் பால்ராஜ், பொதுசெயலாளர் முருகேசன், மாநில பொருளாளர் நம்பிராஜ் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி