தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்நியமனம்: கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2014

தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்நியமனம்: கல்வித்துறை உத்தரவு

அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்குமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும் பொருட்டு, ஆசிரியர் தேர்வு வாரியம் சிறப்பு தேர்வு நடத்தியது. இதில் 50 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்ற 652 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து 652 பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.வேலை வாய்ப்பு பதிவு மூப்பு முன்னுரிமை படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப தாமதமாகும் என்பதால், அரசு மேல்நிலை பள்ளிகளில் தற்போது கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உள்ள தகுதியான நபர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமிக்கலாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி