சமயப் பணியாற்ற வந்து, திருநெல்வேலி பகுதி மக்களின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் என ராபர்ட் கால்டுவெல்லுக்கு ஆளுநர் ரோசய்யா புகழாரம் சூட்டினார்.
அறிஞர் பேரவை அமைப்பின் சார்பில் ராபர்ட் கால்டுவெலின் இரு நூற்றாண்டு நிறைவு விழா சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆளுநர் ரோசய்யா பேசியது:
சமய போதகர், மொழியியல் அறிஞர், சமூகவியலாளர் என்று பல நிலைகளில் சிறந்து விளங்கியவர் ராபர்ட் கால்டுவெல். அவருடைய இரு நூற்றாண்டு நிறைவைத் தமிழ் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் என இணைந்து கொண்டாடுவது சிறப்பானது.
இந்தியாவுக்குச் சமயப் பணி ஆற்ற வந்த கால்டுவெல் ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகவும் சேவையாற்றியுள்ளார். அவருடைய தொண்டின் மூலம் திருநெல்வேலி பகுதி மக்களின் வாழ்வு மேம்பட்டுள்ளது.
சமயம், சேவை என செயல்பட்ட அதே நேரத்தில் மொழிகளின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவர் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின் மூலம் திராவிட மொழி அறிஞர்களில் முன்னேடியாகத் திகழ்ந்து வருகிறார். அவருடைய வாழ்க்கை, தற்போதைய தன்னார்வ அமைப்புகளுக்கும், சயம மேம்பாட்டு மையங்களுக்கும் முன்னோடியாக விளக்கக்கூடியது என்றார் ரோசய்யா.
அறிஞர் பேரவையின் தலைவர் ந.வேலுசாமி, அறிஞர் பேரவை இணைச் செயலாளர் கே.ஏ.ராஜாராம், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்த் துறை முன்னாள் தலைவர் மோசஸ் மைக்கேல் பாரடே, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முதல்வர் ஜெசிந்தா குவட்ரஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி