நகரி : ''வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பும் போது, ஆதார் அட்டையை பெட்ரோல் நிரப்பும் ஊழியர்களிடம் கொடுக்க வேண்டும்'' என புத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பாராவ் கூறினார்.
சித்துார் மாவட்டம், நகரி, புத்துார் மற்றும் ரேணிகுண்டா பகுதிகளில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள், வாகனங்களை நிறுத்தி, ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களிடம் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனாரா? என, பரிசோதனை செய்து அனுப்புகின்றனர்.இதுகுறித்து, புத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர், சுப்பாராவ் கூறுகையில், ''வாகன ஓட்டிகள், தவறாமல் ஆதார் அட்டையை, அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் போது, அங்குள்ள ஊழியர்களிடம் கொடுக்க வேண்டும். வாகனங்கள் பயன்படுத்துவோர், 'ஆதார் அட்டை' வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.மேலும், ''அவர்கள் அலைபேசி எண்ணையும் கொடுக்க வேண்டும். அலைபேசியின் மூலம் ஓட்டுனர் உரிமம் காலாவதியாகும் முன், அவர்களுக்கு அலைபேசி மூலம் குறுஞ்செய்தி வரும். எனவே, வாகன ஓட்டிகள் அனைவரும், ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி