நீர்மூழ்கி கப்பலை மாமல்லபுரம் கொண்டு செல்வதில் சிக்கல்:அருங்காட்சியகம் அமைக்கும் பணியில் தொய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2014

நீர்மூழ்கி கப்பலை மாமல்லபுரம் கொண்டு செல்வதில் சிக்கல்:அருங்காட்சியகம் அமைக்கும் பணியில் தொய்வு

மாமல்லபுரத்தில், நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகம் அமைக்க, சென்னையில் உள்ள நீர்மூழ்கி கப்பலை,மாமல்லபுரத்திற்கு கொண்டு செல்வதில் சிக்கல் தொடர்கிறது.

மாமல்லபுரத்தில், நீர்மூழ்கி கப்பலை மையமாகக் கொண்டு, கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது.இதற்காக, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில், 2012 ஜூன், 11ம் தேதி, அரசாணை வெளியிடப்பட்டது.

அருங்காட்சியகம் அமைக்க, இயங்காத, 'வாக்லி' என்று பெயரிடப்பட்ட நீர்மூழ்கி கப்பலை, கடற்படை வழங்கியது. அந்த கப்பல், கடற்படையினர் உதவியுடன் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகத்துடன், கடல் சார் பாரம்பரிய அருங்காட்சியகம், ஒலி - ஒளி படக்காட்சி அரங்கம், மீன் காட்சியகம், உணவுப்பொருள் விற்பனை நிலையம் ஆகியவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அருங்காட்சியகத்தை, மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் அருகே, சுற்றுலா துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அரசு, 10 கோடி ரூபாய் நிதிஒதுக்கியது.சென்னை துறைமுகத்தில் உள்ள நீர்மூழ்கி கப்பலை, மாமல்லபுரத்திற்கு கொண்டு சென்று, அதை தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நிறுவும் பணியை, 'டிரேடெக்ஸ் ஷிப்பிங் கம்பெனி' என்ற தனியார் நிறுவனத்திடம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்ஒப்படைத்தது.

அந்த நிறுவனம், ஏப்ரல் மாதத்தில், நீர்மூழ்கி கப்பலை மாமல்லபுரத்திற்கு இழுத்து சென்றது. ஆனால், உருக்கு பலகைகள், காற்றுப்பைகள், ஆகியவற்றை பயன்படுத்தி, நீர்மூழ்கி கப்பலை, கரைக்கு இழுத்து செல்லும் தொழில்நுட்ப யுக்தி தோல்வி அடைந்தது.எனவே, அந்த நிறுவனம், தன் முயற்சியை கைவிட்டு, மீண்டும் நீர்மூழ்கி கப்பலை, சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது.

மேலும், நீர்மூழ்கி கப்பலை இழுத்து சென்று நிறுவுவதற்கு, அந்த நிறுவனம், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. அதற்கு கூடுதல் அவகாசம் மற்றும் செலவு குறித்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம், விரைவில் தெரிவிக்கப்படும் என, அறிவித்தது.இந்நிலையில், நீர்மூழ்கி கப்பலை மையமாகக் கொண்டு, தமிழ்நாடு கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்தை அமைக்க, தனியார் - அரசு பங்கேற்பு முறையில் இயக்குவோரை தேர்வு செய்ய, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆலோசனை நிறுவனமாகநியமிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி