சியோமி ஃபோன்களை இந்தியாவில் விற்க டெல்லி நீதிமன்றம் தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2014

சியோமி ஃபோன்களை இந்தியாவில் விற்க டெல்லி நீதிமன்றம் தடைஎரிக்சன் நிறுவனத்தின் தொழில்நுட்பம் கொண்ட சியோமி செல்ஃபோன்களை இந்தியாவில் விற்க டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஃப்ளிப்கார்ட் வலைதளம் மூலமாக இந்த ஃபோன்களை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.எரிக்சன் நிறுவனத்தின் தொழில் நுட்பத்தை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதான புகாரின் பேரில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிக்சன் நிறுவன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சியோமி ஃபோன்கள் இந்தியாவுக்குள் இறக்குமதி ஆகாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு சுங்கத் துறை அதிகாரிகளுக்கு நீதிபதி ஜி.பி.மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவில் இதுவரை விற்கப்பட்ட சியோமி ஃபோன்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைத்த வருவாய் குறித்த விவரங்களை அளிக்குமாறும் சியோமி, மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நீதிபதி மிட்டல் உத்தரவிட்டார்.முன்னதாக ஏஎம்ஆர், எட்ஜ், 3ஜி ஆகிய 3 தொழில்நுட்பங்கள் தொடர்பாக தான் பெற்றிருந்த 8 காப்புரிமைகளை சியோமி தனது அனுமதியின்றி பயன்படுத்தியதாக எரிக்சன் நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி