கல்வித்துறையில் மாற்றம் கொண்டுவரக் கூடாது: வைகோ வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2014

கல்வித்துறையில் மாற்றம் கொண்டுவரக் கூடாது: வைகோ வலியுறுத்தல்


கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதல்படி மாற்றம் கொண்டுவரக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை கற்கும் வகையில் கல்விக்கொள்கையை மாற்ற, ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்பான பாரதிய ஷிக்ஸான் மண்டல் மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்துத்துவாகல்வியை மதம் சார்ந்து திணிப்பதும், சமஸ்கிருத மொழியை கற்பதை கட்டாயமாக்குவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டம் என விமர்சித்துள்ள வைகோ, இதனை நடைமுறைப்படுத்த நினைப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். எனவே, தற்போதுள்ள கல்வி முறையில் மாற்றம் கொண்டுவருவதோ, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதோ கூடாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி