வெளிநாட்டு உறவு பாதிக்கக்கூடும் நேதாஜி குறித்த தகவல்களை வெளியிட அரசு மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2014

வெளிநாட்டு உறவு பாதிக்கக்கூடும் நேதாஜி குறித்த தகவல்களை வெளியிட அரசு மறுப்பு

 புதுடெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காணாமல் போன மர்மம் தொடர்பான தகவல்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அளித்த பதிலில், பிரதமர் அலுவலகத்தில் நேதாஜி குறித்த 39 கோப்புகள் உள்ளன

அதன் விவரங்களை வெளியிட்டால் சில வெளிநாடுகள் உடனான உறவு பாதிக்கக் கூடும். அதனால் அதன் விவரங்களை வெளியிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த சுபாஷ் அகர்வால் என்பவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காணாமல் போன மர்மம் தொடர்பாக அரசிடம் உள்ள கோப்புகளில் உள்ள விவரங்களைக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதிலில், சட்டத்தின் குறிப்பிட்ட சில விதிகளின்படி இந்த விவரங்களை தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளது. மேலும் அந்த பதிலில் பிரதமர் அலுவலகம் கூறியுள்ள விவரங்கள்: நேதாஜி குறித்து மொத்தம் 41 கோப்புகள் உள்ளன. அவை பல்வேறு தலைப்புகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டு கோப்புகள் ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

மீதமுள்ள 39 கோப்புகள் பிரதமர் அலுவலகத்தில் உள்ளன. நேதாஜியின் இந்திய தேசியப் படை, அவருடைய மனைவி, மகள்கள் அரசுக்கு எழுதியுள்ள கடிதங்கள், நேதாஜி காணாமல் போனது தொடர்பான நீதிபதி முகர்ஜி கமிஷனின் அறிக்கை, இந்திய தேசியப் படையின் வருவாய் குறித்த விசாரணை, நேதாஜிக்கு பாரத் ரத்னா விருது வழங்குவது உள்ளிட்ட தலைப்புகளில் இந்த கோப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விதிகளின்படி இந்த கோப்புகளில் உள்ள விவரங்களை தெரிவிக்க முடியாது. இந்த தகவல்களை வெளியிட்டால், சில வெளிநாடுகளுடன் உள்ள நமது உறவு பாதிக்கப்படக் கூடும். அதனால் விவரங்களைத் தர முடியாது என்று பதிலில் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. ஆனால் எந்த நாடுகளுடனான உறவு பாதிக்கும் என்ற விவரத்தை தெரிவிக்கவும் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி