'லேட்'டாக வரும் பணியாளருக்கு சம்பளம் 'கட்': உணவுத்துறை அதிரடி திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2014

'லேட்'டாக வரும் பணியாளருக்கு சம்பளம் 'கட்': உணவுத்துறை அதிரடி திட்டம்

அலுவலகங்களுக்கு, தாமதமாக வரும் பணியாளர்களின் சம்பளத்தை, 'கட்' செய்வது குறித்து, உணவு மற்றும் பொது வினியோகத் துறை ஆலோசித்து வருகிறது.

தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில், பணிக்கு உள்ளே வரும்போது, 'விரல் ரேகை' பதிவு செய்ய வேண்டும். ஒன்று அல்லது 2 நிமிடம் தாமதமானால் கூட, ஊழியரின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும். இதனால், உரிய நேரத்தில், அனைத்து ஊழியர்களும் பணியில் ஆஜராகி விடுவர். ஆனால், அரசு துறைகளில், இன்னும் வருகை பதிவேட்டில் கையெழுத்து வாங்கும் முறையே அமலில் இருந்து வருகிறது. இதனால், சில அரசு ஊழியர்கள், தாமதமாக பணிக்கு வந்தாலும், சரியான நேரத்தில் அலுவலகத்துக்கு வந்ததாக குறிப்பிடுகின்றனர். சிலர், காலதாமதமாகவே வருகின்றனர். இவர்களுக்கு சம்பளம் எதுவும் பிடிக்கப்படுவதில்லை. இதை மனதில் கொண்டு, உணவு மற்றும் பொது வினியோக துறைக்கு, புதிதாக பதவியேற்று கொண்ட கமிஷனர், பட்டணஷெட்டி, கடந்த நவ., 26ம் தேதி, தனது துறைக்கு, ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். அதில், 'அதிகாரியோ, ஊழியர்களோ, உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை எனில், அவர்களின் அன்றைய சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். மேலாளரின் அனுமதியின்றி, விடுமுறை எடுக்கக் கூடாது' என, குறிப்பிட்டிருந்தார்.

கமிஷனர் அலுவலகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அதிகாரிகளே, சரியான நேரத்துக்கு வருவதில்லை. பல முறை வாய்மொழியாக, நேரத்துக்கு பணிக்கு வரவேண்டும் என கூறியிருந்தும், ஊழியர்கள் காலதாமதமாகவே வருகின்றனர். மேலும், ஊழியர்கள், தாங்கள் விடுமுறை எடுப்பதை, தங்களுடன் பணியாற்றுபவரிடமோ அல்லது தொலைபேசி மூலமாகவே தகவல் தெரிவிக்கின்றனர். சட்டப்படி, அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் காலை, 10:00 மணிக்கு அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டும். மாலை, 5:30 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.



ஊழியர்கள் புலம்பல்:



ஊழியர்களோ, 'முதல் நாள் இரவு உடல் நிலை சரியில்லாமல் போனால், நாங்கள் எப்படி அலுவலகத்துக்கு வந்து, விடுமுறை கடிதம் கொடுக்க முடியும். பல ஊழியர்கள் ரயிலில், பணிக்கு வருகின்றனர். ஒரு வேளை ரயில் தாமத மாக வந்தால், நாங்கள் எப்படி, உரிய நேரத்தில், அலுவலகத்திற்கு செல்ல முடியும்?' என, கேள்வி கேட்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி