ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்: கவுன்ட் டவுண் துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2014

ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்: கவுன்ட் டவுண் துவக்கம்

விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப, இந்திய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட, ஆளில்லா மாதிரி விண்கலத்துடன் ஜி.எஸ்.எல்.வி., - மார்க் 3 ராக்கெட்டை, சோதனை ரீதியில் விண்ணில் செலுத்துவதற்கான, 24 மணி நேர கவுன்ட் டவுண், இன்று காலை, 8:30 மணிக்கு துவங்குகிறது.


சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ'வின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, இந்த ராக்கெட் நாளை காலை, 9:00 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. 'இஸ்ரோ' விஞ்ஞானிகள், கிரையோஜெனிக் தொழில்நுட்பம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி., - மார்க் 3 ராக்கெட்டை வடிவமைத்துள்ளனர். இந்த ராக்கெட், செயற்கை கோள்களை, பூமிக்கு அருகாமையில், 180 கி.மீ.,; தொலைவில், 36 ஆயிரம் கி.மீ., என்ற நீள்வட்ட பாதையில் நிலை நிறுத்தும் திறன் கொண்டது. இந்த ராக்கெட் மூலம், 'கேர்' என, பெயரிடப்பட்ட ஆளில்லா மாதிரி விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. விண்வெளிக்கு, வீரர்களை அனுப்பும், 'இஸ்ரோ' அடுத்த சாதனை முயற்சியாக இது கருதப்படுகிறது.

இந்த விண்கலம்,


* 3,735 கிலோ எடையுள்ளது.


* உயரம், 2.7 மீட்டர்; அகலம், 3.1 மீட்டர்.


* மூன்று பேர் அமர்ந்து செல்லலாம்.


* விண்கலம் பூமிக்கு திரும்பும்போது, அதன் வேகத்தை கட்டுப்படுத்த, மூன்று நிலைகள் கொண்ட, 'பாராசூட்'கள் பொருத்தப்பட்டுள்ளன.


* பூமியின் புவியிர்ப்பு விசைக்குள் விண்கலம் வரும்போது, தீப்பற்றிக் கொள்ளாமல் இருக்க, அதன் மேற்பரப்பில், வெப்பத்தை கட்டுப்படுத்தும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.


* விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட, ஐந்தரை நிமிடங்களில், பூமியில் இருந்து, 126 கி.மீ., தொலைவிற்கு சென்று, மீண்டும் பூமிக்கே திரும்பும்.


* அந்தமானுக்கு அருகே, 600 கி.மீ., தொலைவில், கடலில் விழும்.


* விண்கலம் கடலில் விழுந்த உடன், கடல் மேற்பரப்பில், ரசாயன கலவை தோன்றும்.


* விண்கலத்தில் உள்ள சென்சார் கருவி, விண்கலம் விழுந்த இடத்தை, சுட்டிக்காட்டும்.


* ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதில் இருந்து, விண்கலம் பூமிக்கு திரும்புவது வரை, அனைத்து நடவடிக்கைகளும், 25 நிமிடத்திற்குள் முடியும்.


* ஹெலிகாப்டர் மூலம் விண்கலம் மீட்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி