புது தில்லி பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியோடு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், நெட், செட் ஆகிய தகுதித் தேர்வின் முதல் தாளுக்கான சிறப்பு வகுப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம், என பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெ. சின்னையா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரையும் நடைபெறும். யுஜிசி-நெட் முதல் தாளுக்கான சிறப்பு வகுப்புகள் 11 மாதிரி தேர்வுகளுடன் முற்றிலும் இலவசமாக நடத்தப்படும்.
இவ்வகுப்புகளில் பங்கேற்க, டிசம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ள யுஜிசி-நெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதில் சேர விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களைப் பற்றிய விவரங்களை, நேரிலோஅல்லது கீழ்காணும் முகவரிக்கோ, ஒருங்கிணைப்பாளர், யுஜிசி-நெட் செட் பயிற்சி மையம், மேலாண்மையியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை-21 என்ற அனுப்பி வைக்கவேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய 0452-2456100 என்ற எண்ணிலோ அல்லது மதுரை பல்கலைக்கழக இணையதள முகரியிலோ தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி