TNPSC-VAO:கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2014

TNPSC-VAO:கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி நடத்தப்பட்ட தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 880 பேர்எழுதினர். இவர்களில் 6 லட்சத்து 71 ஆயிரத்து 506 பேரின் மதிப்பெண்கள், தரவரிசை எண் ஆகியவையும் வெளியிடப்பட உள்ளது. பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியானதரவரிசை நிலை, சிறப்புப் பிரிவு என வெவ்வேறு நிலையையும் தேர்வர்கள், தங்களது பதிவு எண்ணை குறிப்பிட்டு அறிந்துகொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் 27ம் தேதி தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதற்கானபட்டியலும் முடிவுகள் வெளியிடப்படும் போது வெளியாகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி