“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் ஆன்லைன் மூலம் இரண்டு நாட்கள் வரை திருத்தம் மேற்கொள்ளலாம்,”என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தரவு:
மார்ச்சில் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர், புகைப்படம், பிறந்ததேதி, தந்தை, தாய், பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை www.tndge.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் பள்ளி வாரியாக பதிவேற்றம் செய்ய ஜன.,1 முதல் 6 வரை தலைமையாசிரியர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அப்பணிகள் முடிந்த நிலையில் அதை முழுமையாக சரிபார்த்து ஆன்லைன் மூலம் நாளை மற்றும் நாளை மறுநாள் தேவைப்படும் திருத்தம் மேற்கொள்ளலாம். அதன்பின் திருத்தம் செய்ய இயலாது என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி