மலைவாழ் மாணவர்களுக்கு 'இ - கிளாஸ்'டாப்சிலிப் பள்ளியில் நவீன மயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2015

மலைவாழ் மாணவர்களுக்கு 'இ - கிளாஸ்'டாப்சிலிப் பள்ளியில் நவீன மயம்


பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில், மலை வாழ் மாணவர்களுக்கு, 'இ-கிளாஸ்' முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப் வனப்பகுதி.

டாப்சிலிப், எருமைப்பாறை, வரகளியாறு, கூமாட்டி, கோழிகமுத்தி ஆகிய இடங்களில்,மலைவாழ் மக்களுக்கு அடிப்படை கல்வி வசதியை உருவாக்கி தரும் நோக்கில், 1951ல் 'மவுண்ட்ஸ்டூவர்ட் மலை மக்கள் பள்ளி' என்ற பெய ரில் சுங்கத்தில், (தற்போது கேரளாவில் உள்ளது) ஆரம்பிக்கப்பட்டது.தற்போது டாப்சிலிப் பகுதியில், அரசு நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது; 86 மாணவர்கள் படித்து வருகின்றனர்.இ- - கிளாஸ் முறை: இப்பள்ளியில், வனத்துறையினர், 'வைல்டு விங்' தன்னார்வ அமைப்புடன் இணைந்து, மலைவாழ் மாணவர்களுக்கு காணொலி மூலம் வகுப்பு நடக்கிறது. வாரத்தில், நான்கு மணி நேரம் நடக்கிறது. இதில், சென்னை, நெய்வேலி, பெங்களூரு, யு.எஸ்.ஏ., ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மன் ஆகிய இடங்களிலிருந்து தன்னார்வலர்கள், 'காணொலி' மூலம் வகுப்பு எடுக்கின்றனர்.

அறிவியல், கணிதம், ஆங்கிலம் என, மூன்று பாடங்கள், 'இ - கிளாஸ்' முறையில் எடுக்கப்படுகின்றன.பாடங்களை, 'இ - கிளாஸ்' மூலம் நடத்தும் ஆசிரியர்கள், பாடங்களை நடத்துவதோடு மட்டுமின்றி, கேள்விகளை தயார் செய்து பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். பள்ளி மூலம் தேர்வு நடத்தி, மீண்டும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் அனுப்பப்படுகிறது. மாணவர்களின் தரத்தினை பரிசோதித்து, அதற்கேற்ப பாடங்கள் நடத்தப்படுகின்றன.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'காணொலியில், கேமரா மூலம் காட்சிகள் தெரிவதால், முழு ஈடுபாட்டுடன் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இந்த முறையானதுஅவர்களிடம் சிறந்த மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது' என்றனர்.'மலைவாழ் மக்களின் குழந்தைகள் ஒரே இடத்தில் கல்வி கற்க, இத்திட்டம் மிகவும் உதவியாக உள்ளது. மாணவர்கள் ஆர்வமாக கற்கின்றனர்' என்கின்றனர் பள்ளி நிர்வாகத்தினர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி