2 ஆண்டு ஆகியும் தேர்வு முடிவு வரவில்லை: கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகம் முற்றுகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2015

2 ஆண்டு ஆகியும் தேர்வு முடிவு வரவில்லை: கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகம் முற்றுகை


கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடந்து, இரண்டுஆண்டுகளாகியும், முடிவை வெளியிடாததால், அதிருப்தி அடைந்தோர், கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

2012ல் எழுத்துத் தேர்வு:

தமிழகத்தில், காலியாக உள்ள, 3,569 கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு,2012 நவம்பர் மாதத்தில், எழுத்துத் தேர்வு நடந்தது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்; இரண்டு மாதங்களில், 7,400 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். நேர்முகத் தேர்வு நடந்து, இரண்டு ஆண்டுகளாகியும், தேர்வு முடிவு கள் வெளியாகவில்லை. தேர்வு எழுதியோர், கோர்ட் வரை சென்று, முடிவை வெளியிடும் உத்தரவை பெற்றனர். பல கட்ட போராட்டங்கள் நடந்த நிலையில், 'டிச., 20ம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும்' என, கூட்டுறவு சங்க பதிவாளர் உறுதி அளித்திருந்தார்; ஆனால், முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. இதனால், தேர்வு எழுதி காத்திருப்போரில், 300க்கும் மேற்பட்டோர், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நேற்று காலை சென்னை வந்தனர்.

அதிகாரிகள் உறுதி:

கீழ்ப்பாக்கத்தில் உள்ள, கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 'இந்த மாத இறுதிக்குள் முடிவுகள் நிச்சயம் வெளியாகும்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனாலும், பாதி பேர் இடத்தை காலி செய்யாமல், தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி