முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2015

முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை.


விழுப்புரம்: மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார்.

மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு,23 மையங்களில் நடக்கிறது. இதில், 8 ஆயிரத்து 798 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார். தேர்வு எழுதுவோர், எவ்வித எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மொபைல் போன் தேர்வு மையத்திற்கு கொண்டு வரஅனுமதிக்கப்படாது எனவும் கலெக்டர் தெரிவித்தார். சி.இ.ஓ., மார்ஸ், அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சீத்தாராமன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மாதவன், தனமணி, பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி