சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்பொம்மலாட்டம் மூலம்புகையில்லா போகி பண்டிகை மற்றும் பெண்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2015

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்பொம்மலாட்டம் மூலம்புகையில்லா போகி பண்டிகை மற்றும் பெண்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புகையில்லா போகி பண்டிகை மற்றும் பெண்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி பொம்மலாட்டம் மூலம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை மாணவி மங்கையர்க்கரசி வரவேற்றார்.

தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார் .பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் , திருக்குறள் நடன தாத்தா சுந்தர மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நீயும் பொம்மை நானும் பொம்மைசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புகையில்லா போகி பண்டிகை மற்றும்பெண்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிபொம்மலாட்டம் மூலம் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் தலைமை உரை நிகழ்த்துகையில் ,நீயும் பொம்மை,நானும் பொம்மை குடும்பத்தில் உள்ள எல்லோரும் பொம்மலாட்டம் மாதிரி நடித்து கொண்டு உள்ளோம் என்று கூறுவது போல் தாமஸ் ஆண்டனிநன்றாக மாணவர்களுக்கு நினைவாற்றலை அதிகரிக்கும் வகையில் பொம்மைகள் மூலம் சொல்லி கொடுப்பவர்.

பள்ளியை, பாடத்தை வெறுக்கும் குழந்தைகளை மனதை மாற்ற, அவர்களுக்குப் பிடித்த பொம்மைகளை கொண்டு பாடத்தை நடத்துவதன் மூலம் வகுப்பறையில் அவர்களை கட்டிப்போட்டுபொம்மைகளை வைத்து பாடம் நடத்தும் பொதுராமாயணத்தையும், மகாபாரதத்தையும் இன்ன பிற கதைகளையும் பொம்மலாட்டம் மூலம் ருசிகரமாய் சொல்லி, பெரியவர்களையே கட்டிப்போட காரணமாய் அமைந்த இந்த கலை தற்போது மாணவர்களை மயக்கி வகுப்பறையில் அமர வைத்து வருகிறது.பெண்கல்வியை வலியுறுத்தியும்,புகையில்லா போகி பண்டிகை பற்றியும் ஆசிரியர் தற்போது உங்களுக்கு பொம்மைகள் மூலம் சொல்லி கொடுக்க உள்ளார்.நானும் உங்களோடு சேர்ந்து அதனை காண்பதற்கு ஆவலாக உள்ளேன் என்றார்.பாரதியார் பாட்டுபாடும் பலே பொம்மைகள்ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த நாதகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி ஆசிரியர் தே. தாமஸ் ஆண்டனி பெண்கல்வியை வலியுறுத்தி பொம்மைகள் மூலமாக பாடம் நடத்த ஆரம்பித்தார்.பொம்மைகளை பார்த்ததும் மாணவ,மாணவியர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.பொம்மை பேச ஆரம்பித்த உடன் அணைத்து மாணவர்களும் அதனை உன்னிப்பாக கவனித்தனர்.

பொம்மை கேள்விகள் கேட்க,கேட்க மாணவ ,மாணவியர் உற்சாகமாக பதில் அளித்தனர்.பெண்கல்வி தொடர்பாக பாரதியார் பாடல்களை பொம்மைகள் பாட,பாட அதனை மாணவ,மாணவியரும் பின் குரலிட்டு பாடினார்கள்.பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாத பெற்றோரிடம் கல்வியின் அவசியத்தை பொம்மைகள் பேசுவது போல் விரிவாக எடுத்து கூறினார்.பெற்றோர் நிறைவாக மாணவியை பள்ளியில் சேர்ப்பது என்று முடிவெடுத்து பள்ளியில் சேர்க்கும் வரை பொம்மைகள் மூலமாக விளக்கினார்.மாணவ,மாணவியரும் ஆர்வமுடன் கவனித்து பின்பு அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர். பல்வேறு விதமான பொம்மைகளைபலகுரலில் பேசி இதனை செய்து காண்பித்தார்.மாணவ,மாணவியர் ஆர்வமுடன் இதன் மூலம் பாடம் படித்தனர்..புகையில்லா போகி பண்டிகைதமிழக அரசு புகையில்லா போகி கொண்டாடுவது தொடர்பான விழிப்புணர்வைமாணவ,மாணவியரிடம் பொம்மைகள் மூலம் எடுத்து கூறினார் . மனித குரங்கு பொம்மை மூலம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

புகை உண்டாவதால் ஏற்படும் தீமைகளை விரிவாக,அதனால் ஏற்படும் உடல்நல கோளாறுகளை பொம்மை மூலம் செய்து காண்பித்தார்.மாணவ,மாணவியர் பயம் கலந்த ஆர்வமாக மனித குரங்கு பொம்மையை தொட்டு பார்த்தனர். பிறகு அதனுடன் கை குலுக்கி கேள்விகள் கேட்டு 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவ,மாணவியர் முத்தம் கொடுத்து மகிழந்தனர்.இந்த பொங்கலை புகையில்லா பொங்கலாக கொண்டாடுவதாக உறுதி எடுத்து கொண்டனர்.பொம்மைகள் மூலமான பாடம் நினைவாற்றலை அதிகபடுத்தும்பொம்மலாட்ட பாடம் குறித்து தே. தாமஸ் ஆண்டனி கூறும்போது, மாணவர்கள் கல்வி கற்பதை எளிமையாக அரசு செயல்வழி கற்றல் முறையை செயல்படுத்திவருகிறது. இந்த முறையில் அட்டைகளில் ஒட்டப்பட்ட பொம்மைகளை கொண்டுவகுப்புகளை நடத்தி வந்தோம். நீண்ட நாட்களுக்கு அட்டைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில், இதை தொடர்வதில் சிரமங்கள் ஏற்பட்டன.

குழந்தைகள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பொம்மைகளே ஹீரோக்களாக உள்ளன. இதனால், அவர்களுக்குப் பிடித்த பொம்மைகளை வைத்து பாடம் சொல்லித்தர முடிவு செய்தேன்.பொம்மலாட்டம் நடத்துவது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கொண்டு கற்றுக் கொண்டேன். என்னிடம் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, தாத்தா என ஒரு குடும்ப உறவுமுறையை குறிக்கும் பொம்மைகள் உள்ளன. பாடங்களை உரையாடலாக, கேள்வி பதிலாக இந்த பொம்மைகள் பேசுகின்றன. குழந்தைகள், பெரியவர், பெண் குரல் என பல குரல்களில்பேசி பொம்மைகள் வாயிலாக வகுப்பறையில் பாடம் நடத்துகிறேன். குழந்தைகள் எளிதில் புரிந்து படங் களில் முழுக்க லயித்து விடுகின்றனர் என்றார்.

அப்துல் கலாமின் தொடக்க பள்ளி ஆசிரியர்களின் நினைவுஅவர் மேலும் பேசுகையில் , ஒரு முறை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பேசும்போது , "நான் இந்த உயர்வை அடைந்ததற்கு காரணம்,எனக்கு எழுத்தறிவித்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களே.அவர்களை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன்!என்று குறிப்பிட்டார்.அவருக்கு மட்டும் அல்ல ,நம்மில் பலருக்கும் அ ,ஆகற்பித்த ஆசிரியர்களை பசுமையாக நினைவில் இருக்கும்.ஒவ்வொருவருக்கும் தொடக்கக் கல்வி,விதை போன்றது.அதைச் சரியாக மாணவர்களின் மனதில் விதைக்க வேண்டும்.அதற்கான முயற்சிதான் பொம்மைகள் மூலம் பாடம் நடத்துவது ".என்றார். எனது பள்ளியை தவிர முதன் முதலாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்தான் பொம்மலாட்ட வழி கல்வியை நடத்துகிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.திரைக்கு பின் அமர்ந்து பாடம் நடத்துவது மேலும் பயனுள்ளதாக இருப்பதாகவும்,ஆசிரியர் நம்மைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறார் என்ற பயம் அவர்களிடம் விலகி விடுகிறது அதனால் ஆர்வத்துடன் பாடங்களை கவனிக்கின்றனர் என்றார்.

பொம்மால்லாட்டத்தாலே மாணவர்கள் லீவ் எடுக்கமாட்டார்கள்மாணவர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப கதைகளை கூறி அதன் வழியாக பாடத்தை சொல்லி கொடுக்கும்போது எளிதில் மாணவர்கள் மனதில்பதிகிறது.எட்டுக்கும் அதிகமான குரல்களில் நானே மாற்றி மாற்றிப் பேசி அனைத்து பாடங்களையும் நடத்துகிறேன்.இதனால் மாணவர்கள் நேரிடையாகவே பார்த்தல்,கேட்டல் செயல்பாடுகள் மூலமாக 90 சதவீதம் கற்றல் திறன் அதிகரிக்கிறது.ஒவ்வொரு பொம்மையும் ஒவ்வொருகுரலில் பேசும் வகையில் நானே பயற்சி எடுத்துக் கொண்டேன்.இந்த முறையில் கற்றுக் கொடுப்பதால் மாணவ,மாணவியர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருவதும்,லீவ் எடுக்கமால் பள்ளிக்கு வருவதும் அதிகரிக்கும் என்றார்.மாணவ,மாணவியருடன் கலந்துரையாடல்பொம்மை வாங்க யோசனை

மாணவி பரமேஸ்வரி : நீங்கள் பொம்மாலட்டம் ஆரம்பித்ததற்கு யார் காரணம்?

பதில்: ஒரு நாள் வீட்டில் உட்கார்ந்திருந்தேன் .டி .வி.யில் கார்ட்டூன் நிகழ்ச்சி ஓடிகொண்டிருந்ததது.செய்தி பார்க்க ரிமோட்டை தேடினேன்.காணவில்லை.குழந்தைகளிடம் கெஞ்சி கேட்டபோதுதான் மறைத்து வைத்திருந்த ரிமோட்டை எடுத்து கொடுத்தார்கள்.ஏன் என்று கேட்டேன்.கார்டூன் பார்க்கும்போது யாரும் சேனல் மாற்றிவிடக்கூடாது அல்லவா என்றார்கள்.அப்போது எனக்குள் ஒரு எண்ணம்தோன்றியது.குழந்தைகளை கார்டூன் வெகுவாக கவர்கிறது.எனவே கார்ட்டூன் வைத்து பாடம்நடத்தினால் என்ன என்பதே அது.உடனே இதற்காக சென்னைக்கு சென்று ரூ.5 ஆயிரத்திற்குபொம்மலாட்ட பொம்மை வாங்கி வந்தேன்.அவற்றை கைகளில் சொருகி வாயை அசைத்து அந்த அசைவுக்கு ஏற்ப நானும் பேசி பழகினேன்.இதனை ஆரம்பிக்க எனது குழந்தைகளே காரணம்.

மாணவன் நடராஜ் : உங்க நிகழ்ச்சியை முதன் முதலில் எங்கு ஆரம்பித்தீர்கள் ?

பதில்: எனது வீட்டிலும் ,நான் வேலை பார்க்கும் பள்ளியிலும்தான் ஆரம்பித்தேன்.

மாணவி திவ்யதர்சினி : திரைக்கு பின்னாடி நின்னு எவ்வாறு நடிச்சு காண்பித்தீர்கள்?

பதில்; நான் பல்வேறு குரல்களில் சின்ன வயது முதலே பேசி பழகி உள்ளேன்.அதே போன்றுஇரண்டு,மூன்று குரல்களில் பேசி பொம்மைகளை வாய் அசைக்க வைப்பேன்.நீங்களும் இந்த சின்ன வயதிலேயே பல குரலில் பேசி பழகுங்கள் என்றார்.

மாணவர் ராஜேஸ்வரன் :உங்க மாதிரி ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் ?

பதில்: நன்றாக படித்து பல்வேறு அரசு பணிகளுக்கு செல்வதுடன் ஆசிரியர் பணிக்கு வந்தால் என்னை போன்று சொல்லி கொடுக்க முடியும்.

மாணவி கிருஸ்ணவேணி :பொம்மைகளை திரைக்கு மேலே உயர்த்தி பிடித்து கொண்டு உள்ளீர்களே? கஷ்டமாக இருக்கமே?என்ன செய்வீர்கள்?

பதில்:கஷ்டமான வேலை தான்.தொடர்ந்து கைகளை மேலே பிடித்து கொண்டிருப்பதால் கைகள் வலிக்கும்.ஆயினும் உங்களை போன்ற குழந்தைகள் தொடர்ந்து சிரித்து மகிழ்ச்சியாக படிக்கும்போது அந்த வழி காணமால் போய் விடும்.

மாணவி நந்தினி : நீங்க விரும்பிதான் இதனை செய்கிறீர்களா?

பதில் : உங்களை போன்ற குழந்தைகளுக்காக இதனை விரும்பிதான் இதனை செய்கிறேன் என்றார்.

மாணவி காயத்ரி : எப்படி பலகுரலில் பேசி வருவதற்கு பயிற்சி எடுத்தீர்கள் ?

பதில் : சிறு வயதில் லூஸ் மோகன் நடிகர் மாதிரி நானே பேசி பார்ப்பேன்.அதுபோன்று பல முக்கிய நபர்களின் குரலல்களில் பேசி பார்த்தேன்.எம்.ஆர் .ராதா மாதிரி பேசி பார்ப்பேன் .முடியும் என்றால் முடியும் .அச்சத்தையும்,கூச்சதையும் விட்டு விட்டால் உச்சத்தை அடைய முடியும்.ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது.முயற்சி செய்தால் சூப்பராக வரலாம்.இவ்வாறு பல மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு பதில் பெற்றனர்.

நிறைவாக 7ம் வகுப்பு மாணவி தனம் நன்றி கூறினார்.நிகழ்ச்சியின் நிறைவாக 1 மற்றும் 2ம் வகுப்பு குழந்தைகள்‘படித்து விட்டு என்ன வேலைக்கு செல்வாய்’ என்று கேட்டால் ‘பொம்மை சாரைபோல் ஆசிரியராவேன்’ என கோரஸ் போடுகின்றனர் குழந்தைகள்.‘பூட்டை திறப்பது கையாலே... நல்ல மனதை திறப்பது மதியாலே... பாட்டை திறப்பது பண்ணாலே... இன்ப வீட்டை திறப்பது பெண்ணாலே...’ பாரதியின் பாடல் வரிகள் பள்ளியை விட்டு வரும்போது மழலைத் தமிழில் மயக்கி ஒலிக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி