தமிழக அரசின் மலிவுவிலை சிமெண்ட் விற்பனை தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2015

தமிழக அரசின் மலிவுவிலை சிமெண்ட் விற்பனை தொடக்கம்


தமிழக அரசின் மலிவு விலை சிமெண்ட் விற்பனை இன்று தொடங்கியது. இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 5 கிட்டங்கிகளில் மூட்டை ஒன்று 190 ரூபாய் என்ற விலையில் சிமெண்ட் விற்பனை செய்யும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வரும் 10ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் உள்ள 470 கிட்டங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களிடம் இருந்து மாதம் தோறும் 2 லட்சம் மெட்ரிக்டன் சிமெண்ட் கொள்முதல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

மலிவு விலை சிமெண்ட் பெற விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கட்டட திட்ட வரைபடத்தையோ அல்லது கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், பஞ்சாயத்து யூனியன் மேற்பார்வையாளர், சாலை ஆய்வாளர் போன்றோரில் யாரேனும் ஒருவரிடம் இருந்து சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீடுகட்டுபவர்களுக்கு 100 சதுர அடிக்கு 50 மூட்டைகளும் அதிகபட்சமாக ஆயிரத்து 500 சதுர அடிக்கு 750 சிமெண்ட் மூட்டைகளும் மலிவு விலையில் வழங்கப்படும என அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை புதுப்பிக்க மற்றும் பழுதுபார்க்க 100 மூட்டைகள் வரை மலிவு விலையில் சிமெண்ட் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி