தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுக்கான திறன் வளர்க்கும் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2015

தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுக்கான திறன் வளர்க்கும் பயிற்சி

தேவகோட்டை .தேசிய வருவாய் வழி மற்றும் திறன் வளர்க்கும் பயற்சி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடந்தது.தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.ராமசந்திரன் முன்னிலை வகித்தார்.

மாணவர் ரோஹித்குமார் வரவேற்றார்.ஈரோடு ரயில்வே பயற்சி பள்ளி ஆசிரியர் துரைப்பாண்டியன் மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு பயற்சி அளித்தார்.வார்த்தை அமைப்பு,கணித முறை,நுண்ணறிவுத்திறன் ஆகியன பற்றியும்,கேள்விகள் அமைப்பு,பதில் அளிக்கும் கூறுகள் குறித்தும் பயற்சி அளித்தார்.ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பதில் அளித்தனர்.

பயற்சி ஆசிரியரும் மாணவர்களின் தன்னார்வத்தை பாராட்டி கூடுதல் பயற்சி அளித்தார்.இப் பயற்சியை மாணவர்களுக்கு எப்படி கற்பிப்பது என்பது குறித்த ஆலோசனைகள் சக ஆசிரிய,ஆசிரியைகளுக்கும் , விளக்கம் அளித்து பேசினார். இந்த தேர்வு குறித்தும் ,இதனில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பலன்கள் குறித்தும்,தேர்வு முடியும் வரை பெற்றோர்கள் எவ்வாறு மாணவர்களை ஊக்கபடுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.இதனில் வெற்றி பெற்றால் அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை பெற மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.500 அரசால் வழங்கப்படுகிறது.இதை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

புவனேஸ்வரி,மீனாள்,சேதுக்கரசி ,அங்கையற்கண்ணி ,சொர்ணாம்மாள் உட்பட பல பெற்றோர்கள்கலந்து கொண்டு விளக்கம் பெற்றனர்.மாணவி நந்தினி நன்றி கூறினார்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் முத்து மீனாள் ,ஸ்ரீதர்,செல்வ மீனாள் செய்திருந்தனர்.

Thanks & Regards,
L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam School,
Devakottai.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி