காந்தி பெயரில் அவரது படத்துடன் பீர் விற்பனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2015

காந்தி பெயரில் அவரது படத்துடன் பீர் விற்பனை


காந்தி பெயரில் அவரது படத்துடன் பீர் விற்பனை செய்த அமெரிக்க மதுபான நிறுவனம் மீது கோர்ட்டில் பொதுநலவழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நியூ இங்கிலாந்த் பிரிவிங் என்ற மதுபானம் தயாரிப்புநிறுவனம் காந்திபூட் என்ற பெயரில் மூன்று வித சுவைகளுடன் புதிய பீர் ரகத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது. அந்நிறுவனம் காந்தியின் உண்மை, அன்பை போதிக்கும் கொள்கை போன்று இந்த பீர் சுத்தமானது என அவரது பெயரை நிறுவனத்தின் விளம்பரதூதராகவும் சித்தரித்துள்ளது. இந்தியாவின் தேசத்தந்தை காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக புகார்எழுந்தது.

இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜனார்த்தன் ,நம்பள்ளி மாவட்ட, 11-வது மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். .அதில் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மாகாந்தி, உலகம் முழுவதும் புகழ்பெற்ற தலைவர் அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க மதுபான தயாரிப்புநிறுவனம் அவரது படத்தினையும்,பெயரையும் பீர் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இது 1971-ம் ஆண்டு இந்திய தேசியத்தின் மதிப்பையும்,மாண்பையும் தடுக்கும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 124- -ன் படி தேசத்தந்தை காந்தியை அவமரியாதை செய்வதாகும். இது கண்டனத்திற்குரியது.எனவே அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி மன்னிப்புகோர உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. சுருளிவேல் சார் வணக்கம்., இந்த இங்கிலாந்து நிறுவனத்தை சார்ந்த நிறுவனரை மன்னிப்பு கோரச்சொல்வதா? இவரை தூக்கிலிட அனுமதிக்கவேண்டும்.

    ReplyDelete
  2. காந்தி படம் மட்டும் பிரச்சனை. ஆனால் காந்தி சொன்ன கருத்து மது அருந்தாதே.ஆனால் அரசே டாஸ்மார்க் நடத்துவது குற்றம் ? இல்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி