முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே, தன்னையும் இந்த வழக்கில் சேர்க்கக் கோரி திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்தார். இந்நிலையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு எதிராக அன்பழகன் மீண்டும் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி குமாரசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீட்டு வழக்கில் தேவையில்லாமல் குறுக்கிட்டால் அன்பழகன் ஆஜராக நேரிடும் என்றும், தொடர்ந்து இதுபோன்று குறுக்கீடு செய்தால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்ற வேண்டுமெனில் கர்நாடக அரசிடம் முறையிடுங்கள் என்றும், பவானி சிங்கை நீக்கக்கோரிய மனுவை நீதிமன்ற பதிவுத்துறையிடம் தாக்கல் செய்யுங்கள் என்றும் நீதிபதி கூறினார்.
மேலும், அரசு வழக்கறிஞராக உங்களை (அன்பழகன் தரப்பு வழக்கறிஞரை பார்த்து) நியமிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா என்று வினா எழுப்பிய நீதிபதி, நீதிமன்றத்தை அரசியல் களமாக பயன்படுத்தாதீர்கள் என்று எச்சரித்தார்.
இதைத் தொடர்ந்து வாதாடிய அன்பழகன் தரப்பு வழக்கறிஞர், அன்பழகனுக்கு 92 வயது ஆவதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இயலாது என்று தெரிவித்ததோடு, அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை என்றும், மனுவை நீதிமன்ற பதிவுத்துறையிடம் தாக்கல் செய்து கொள்கிறோம் என்றும் கூறினார்.
இதையடுத்து, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் மூன்றாவது நாளாக வாதாடி வருகிறார்.
சென்னையில் ஆசிரியை பணியிடம் உள்ளது தொடர்புக்கு
ReplyDeletekathir202020@gmail.com
LADIES ONLY
OC SCIENCE 1
SC(A) MATHS 1
MBC SCIENCE 1
BC SOCIAL SCIENCE 1
PG ZOOLOGY 1
மணி சார் நீதி மன்றம் சொன்ன கருத்துக்களை முழுவதும் எழுதுங்கள் .இப்படி எடிட் செய்து
ReplyDeleteஒருசார்பாக எழுதாதீர்கள்.பவானிசிங்கிடம் கேட்கப்பட்ட கேள்விகள் ,ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் எழுதுங்கள்
பெங்களூரு: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங்கை நீக்கிவிட்டு புதிய வக்கீல் நியமனம் செய்யக் கோரி தி.மு.க. பொது செயலாளர் க. அன்பழகன் சார்பில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.தி.மு.க. பொதுசெயலாளர் க.அன்பழகன் சார்பில் வக்கீல்கள் நேற்று முன்தினம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அதில் தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996 வரை இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சம் சொத்து சேர்த்துள்ளதாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2004ம் ஆண்டு முதல் பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கடந்தாண்டு செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
ReplyDeleteஅதில் ஜெயலலிதா உள்பட நான்கு பேரும் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டனர். தனி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் ஆஜராகி வருகிறார். அவர் முழுக்க முழுக்க அரசுக்கு ஆதரவாக செயல்படாமல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். மேலும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அவர் ஆஜராகி வாதம் செய்ய கர்நாடக அரசு இன்னும் அதிகாரபூர்வமாக நியமன உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஆகவே அவரை நீக்கிவிட்டு, புதிய வக்கீலை நியமனம் செய்யவேண்டும் என்று கூறியிருந்தது. அம்மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்று நீதிபதி நசீர் அகமது முன் விசாரணைக்கு வருகிறது. - See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=126322#sthash.Tcd35EPq.dpuf