'விடுதலை கிடைத்தும் கலாசார அடிமைத்தனம் நீடிக்கிறது' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2015

'விடுதலை கிடைத்தும் கலாசார அடிமைத்தனம் நீடிக்கிறது'

காலனி ஆதிக்கத்தில் இருந்து, நிலம், அரசியல் விடுதலை பெற்றாலும், மொழி, கலாசாரம், மத அடிமைத்தனம் நீடித்து வருகிறது,'' என, அமிர்தசரஸ் குருநானக் தேவ் பல்கலைக்கழக பேராசிரியர் முத்துமோகன் கூறினார்.
சென்னை பல்கலை யில், தத்துவ இயல் துறை சார்பில், 'காலனி ஆதிக்கத்துக்குப் பின், புத்த மதம், மொழி, மத, கலாசாரத்தின் தாக்கங்கள்' என்ற தலைப்பில், இரு நாள் தேசிய கருத்தரங்கம், நேற்று துவங்கியது.


இதில், முத்துமோகன் பேசியதாவது: ஐரோப்பிய நாடுகளைத் தவிர, ஏனைய நாடுகள், காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தவை. இந்த நாடுகளில், பெரும்பாலானவை, விடுதலை பெற்றுவிட்டன. குறிப்பாக, ஆசிய நாடுகளான இந்தியா உள்ளிட்டவை, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றன.
விடுதலை பெறவில்லை:



மூன்றாம் உலக நாடுகள் என, அழைக்கப்படும் இந்த நாடுகள், நிலம் மற்றும் அரசியல் ரீதியான, விடுதலையைப் பெற்றாலும், மொழி, கலாசாரம், மதம் ஆகியவற்றில் இருந்து, இன்னும் விடுதலை பெறவில்லை என்றே கருதப்படுகிறது. ஐரோப்பாவில், ஏற்பட்ட நவீனத்துவத்தோடு, காலனி ஆதிக்கத்தின் தாக்கத்தால், பிற நாடுகளில் ஏற்பட்ட காலசார மாற்றங்களும் ஒப்பிடப்படுகின்றன. இந்து மதம், புத்த மதம் மற்றும் இம்மதங்களைப் பின்பற்றும் நாடுகளில் உள்ள, மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் இவை எதிரொலிக்கின்றன. கிறிஸ்தவ மதத்தை பின்பற்றாதவர்கள் கூட, தங்களின் பாரம்பரிய பெயருக்கு முன், கிறிஸ்தவ பெயரை சூட்டிக் கொள்வதை, கவுரவமாகக் கருதுகின்றனர்.
தாக்கம் நீடிக்கிறது:



இதுபோன்ற கவுரவம், அவர்களின் அன்றாட வாழ்வியல் முறையிலும் எதிரொலிப்பதால், கலாசாரம், பண்பாட்டிலும், காலனி ஆதிக்கத்தின் தாக்கம் நீடிக்கிறது. ஆனால், உள்ளூரில் உள்ள பல இன குழுக்கள், தங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றன. தொன்மையான நாகரிகத்தை பாதுகாக்கவும், மேலை நாட்டின் தாக்கத்தைப் போக்கவும் அவை விரும்புகின்றன.
தனி அடையாளம்:



மத ரீதியாகவும் இந்த பாதிப்பு நிலவுகிறது. உலகின் கிழக்குப் பகுதியின் மதம் என மாறிவிட்ட புத்த மதம், அவை பின்பற்றப்படும் நாடுகளுக்கு ஏற்ப தனி அடையாளங்களை கொண்டுள்ளன. அடிப்படையில் ஜாதியற்ற, அமைதியை போதிக்கும் புத்த மதம், அது பின்பற்றப்படுவோரின் கலாசார பின்புலத்துக்கு ஏற்ப, மாறுதல்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. காலனி ஆதிக்கம் பல நூறு ஆண்டுகள் நீடித்த நிலையில், அதன் தாக்கம், மக்களிடம் பல்வேறு வடிவங்களில் தொடருகிறது. இதை ஏற்று வாழ்வோரும் உள்ளனர். ஏற்க மறுத்து, தொன்மையான கலாசாரத்தை நிலை நிறுத்த விரும்புபவர்களும் இருக்கின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி