தலைமை ஆசிரியர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2015

தலைமை ஆசிரியர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை


பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர் பட்டியலில், பெயர் திருத்தம் செய்து கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல், பள்ளிகளிலிருந்து, 'ஆன் - லைன்' மூலம் தேர்வுத்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுஉள்ளது.

இப்பட்டியலில் உள்ள விவரங்கள் தான், மதிப்பெண் சான்றிதழ்களில் பதிவு செய்யப்படும் என்பதால், மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பல முறை சரிபார்த்துக்கொள்ள உத்தரவிடப்பட்டு இருந்தது. பணி முடிந்த நிலையில், மீண்டும் பல பள்ளிகளில் பெயர் திருத்தத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்ததால், தேர்வுத்துறை இன்று ஒருநாள் இறுதி வாய்ப்புவழங்கியுள்ளது. 'இதையும் மீறி சான்றிதழில் தவறான தகவல்கள் வந்தால், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வுத்துறை எச்சரித்து உள்ளது.

1 comment:

  1. வரலாறு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அரசு உதவிபெறும் பள்ளியில் உள்ளது
    mailto kathir202020@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி