அரசு பள்ளிகளில், ஆசிரியர் வருகையை முறைப்படுத்த அறிவிக்கப்பட்ட, எஸ்.எம்.எஸ்., முறையில் ஆசிரியர் வருகை பதிவேடு கண்காணிப்பு திட்டம் முறைப்படுத்த, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டில், பள்ளி மேலாண்மை தகவல் மையத்தின் ஒரு பகுதியாக, எஸ்.எம்.எஸ்., முறையில் ஆசிரியர் வருகை பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக, இரண்டு மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, 2012 முதல் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இத்திட்டம், அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திட்டத்தின்படி, தலைமையாசிரியர், ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் வருகை குறித்து, காலை 10:00 மணிக்குள் மாவட்ட கலெக்டர், கல்வி அதிகாரிகளுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பப்படும். அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துக் கொள்ள இயலும்.தலைமையாசிரியர்களுக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட பணிச் சுமையை கருத்தில் கொண்டு, இத்திட்டம் அறிவிப்போடு, விரிவுப்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ளது.
இதனால், பள்ளிகளுக்கு தாமதமாக வருதல், இடையில் அறிவிப்பு இன்றி வெளியிடங்களுக்கு செல்லுதல், அறிவிப்பு இல்லாமல், அட்ஜெஸ்மென்ட் என்ற பெயரில் விடுமுறை எடுத்தல் போன்றவை, பல்வேறு அரசு பள்ளிகளில் சாதாரணமாகியுள்ளது.பள்ளி கண்ணாடி என்ற பெயரில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகை எழுதும் பழக்கமும் தற்போது பெரும்பாலான பள்ளிகளில் செயல்படுத்தப்படுவது இல்லை.மாணவர்களின் நலன் கருதி, இத்திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சில தனியார் பள்ளிகள் போன்று, வகுப்பு ஆசிரியர் மூலம் வாரத்துக்கு ஒரு முறையாவது, மாணவர்களின் வருகை குறித்து பெற்றோருக்குபோனில் தெரிவிக்க வேண்டும். பாதை மாறும் மாணவர்களை, இம்முறையில் எளிதாக அடையாளம் கண்டு, பயிற்சி அளிக்க இயலும்.தொடக்கக் கல்வி அதிகாரி காந்திமதி கூறுகையில், "கோவை மாவட்டத்தில், உதவி தொடக்க கல்வி அலுவலர்களால், தினமும், ஆசிரியர்களின் வருகை பதிவேடுகள் ஆய்வுசெய்யப்படுகின்றன.
கல்வி அதிகாரிகள் குழு, திடீர் ஆய்வுகளும் மேற்கொண்டு வருகின்றனர்.வருகை பதிவேடுகளில், முறைகேடுகள் நடப்பது ஆய்வுகளின்போது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மட்டுமின்றி, தலைமையாசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி