பிரதமர் மோடி அறிவித்த, மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகளிடம்,மத்திய அரசு உதவி கோரியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, மாணவர்களின் திறனை அதிகரிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண்களை அளிக்கவும், மற்ற கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்கள் மாறினாலும், இந்த கூடுதல் மதிப்பெண்களை அங்கும் பயன்படுத்தி கொள்ளவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக, மாநில அரசுகளின் உதவியை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாடியுள்ளது.இதையடுத்து, இன்று, டில்லியில், அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கவுள்ளது. இதில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகர் ஸ்மிருதி இரானி தலைமை வகிக்கிறார். வரைவு திட்டத்தை உருவாக்குவது குறித்து, மாநில கல்வி அமைச்சர்களிடம், மத்திய அரசு தரப்பில் ஆலோசனை கேட்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி