இணையதளம் மூலம் குழந்தைகளின் ஓவிய திறமையை வளர்க்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2015

இணையதளம் மூலம் குழந்தைகளின் ஓவிய திறமையை வளர்க்கலாம்


குழந்தைகளுக்கு ஓவியங்கள் வரைவது என்றால் அலாதி பிரியம். தற்போதைய நவீன காலத்தில் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் மூலம் தான் பாடமே எடுக்கப்படுகிறது

. தற்போது குழந்தைகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் குழந்தைகளுக்கு படம் வரையவும், வண்ணங்களை பிரித்தறிந்து கொள்ளவும் ஓவியப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்போம்.அத்தகைய பல படங்களை இணையத்திலிருந்தே பதிவிறக்கி பிரிண்ட் செய்து பயன்படுத்த உதவும் வகையில் கலரிங் என்ற இணையதளம் உள்ளது. இத்தளத்தில் வண்ணம் தீட்ட, எண்களை வரிசையாக இணைத்து படம் வரைதல், ஆன்லைனில்விளையாட சிறிய விளையாட்டுக்கள் என்று குழந்தைகளுக்குப் பயன்படும் பல புதுமைகளைக் கொண்டிருக்கிறது.

வண்ணம் தீட்டும் பிரிவில் கார்ட்டூன் படங்கள், விலங்குகள், இயற்கை காட்சிகள், பூக்கள் என பல படங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த படங்களை பிரிண்ட் எடுத்து குழந்தைகளை கலரிங் செய்ய வைக்கலாம். பத்து நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல முடியாது. இதனால், இது போன்ற புதுமையான இணையதளத்தில் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஓவியப்பயிற்சி அளித்து விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாக மாற்றவும் உதவும்.இதற்கான இணையதள முகவரி : http://www.coloring.ws

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி