அரசாணை வெளியிட்டும் ஊதியம் இல்லை! : அல்லல்படும் பகுதிநேர ஆசிரியர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2015

அரசாணை வெளியிட்டும் ஊதியம் இல்லை! : அல்லல்படும் பகுதிநேர ஆசிரியர்கள்!


பகுதிநேர ஆசிரியர்களுக்கு, உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்க இ.சி.எஸ்., முறையை செயல்படுத்த, அரசாணை வெளியிட்டும், அதிகாரிகளின் மெத்தனத்தால், ஊதியம் கிடைக்காமல் அவதிப்படுவதாக, பகுதி நேர ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், 16 ஆயிரத்து 500 பேர் மாநிலம் முழுவதும் பகுதி நேர ஆசிரியர்களாக, 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். 2014 நவம்பரில், இவர்களின் தொகுப்பூதியம், 7000 ரூபாயாக உயர்த்தியும், ஊதியம் வழங்குவதில், இ.சி.எஸ்., முறையை செயல்படுத்தவும் அரசாணை வெளியிடப்பட்டது.

இதன் படி, சக அரசு அலுவலர்கள் போன்று, பகுதி நேர ஆசிரியர்களுக்கும், ஊதியம் ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்கு முன் கிடைக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இருப்பினும், கோவை மாவட்டத்தில், இ.சி.எஸ்., முறையை செயல்படுத்த அதிகாரிகள் மெத்தனம் காண்பித்து வருகின்றனர்.கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், 900 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர்.இவர்களுக்கு, டிசம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இ.சி.எஸ்., முறையில் ஊதியம் வழங்க, போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால், பகுதி நேர ஆசிரியர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.மேலும், அரசாணையில் அறிவித்த படி ஊதிய உயர்வுக்கான நிலுவை தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை. குறைந்த ஊதியத்தில், பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியத்தை இழுபறிக்கு பின் மாத இறுதியில் வழங்குவதால், மிகுந்தசிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

பகுதி நேர ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ராஜா கூறுகையில், ''இ.சி.எஸ்., முறையை செயல்படுத்த காலம் தாழ்த்தி வருகின்றனர். காசோலை வழங்குவதால், ஊதியத்தை பெறுவதற்கு, 20ம் தேதிக்கு மேல் ஆகிவிடுகின்றது. அரசாணை பிறப்பித்ததும். உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்கும் என, மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால், சிரமம் தொடர்ந்து வருகிறது,'' என்றார்.

16 comments:

  1. Mikavum varuntha kootiya seithi by Jagadesan. Part time teacher association Salem (DT) coordinator.

    ReplyDelete
  2. Alex sir today tripura case enna ajju?

    ReplyDelete
    Replies
    1. Searching WEB news. As soon as received, I would inform you Mr K Mohamed Kamil.

      Delete
  3. 2016 election il tamilnadu thalai vithi -tet problem miga periya matrathai kondu varum........

    ReplyDelete
  4. One district CEO sonnaram go 71 and go 25 government ku favour varum.so next tet Ku padinga nu.

    ReplyDelete
  5. what about the sg adw list court la case varuma varatha

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. any body tell about the cases, enna position iruku epo than case mudivuku varum

    ReplyDelete
  8. 2013 tet appointment eppo ( second list)

    ReplyDelete
    Replies
    1. டெட் இரண்டாம் பட்டியல்

      டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போருக்கு நேரடியாக நியமன ஆணை அவர்களது முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.----www.gurugulam.com

      Delete
  9. Alex sir part time teachers full-time teachers aagavaippullatha ?

    ReplyDelete
  10. தெரிந்துகொள்வோம் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு !!!

    உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன்
    பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில்
    அனைவருக்கும் சந்தேகம்
    வருவது உண்மை, ஆனால் எந்த
    ஒரு நாட்டிடமும் கடன்
    பெறாது நாடு ஒன்று உண்டு.
    அதை தான் இப்போ பார்க்க போகிறோம்.
    * 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக
    இருந்தது லிபியா.
    * நேட்டோ படைகளின்
    தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும்
    வசதியான சூழலில் வாழும்

    மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க
    நாடு லிபியா.
    * லிபியாவில்
    வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள
    உரிமையாக கருதப்பட்டது.
    * மின்சாரம் அனைத்து மக்களுக்கும்
    இலவசமாக வழங்கப்பட்டது.
    * மருத்துவமும் கல்வியும் இலவசமாக
    வழங்கப் பட்டது.
    * மக்கள் தாங்கள் விரும்பும்
    கல்வியோ மருத்துவமோ லிபியாவில்
    கிடைக்காத பட்சத்தில்
    வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது.
    * வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு
    வட்டியில்லா கடன்களாக
    மட்டுமே கொடுக்கப்பட்டது.
    * விவசாயம் செய்ய விரும்புபவர்களு
    க்கு இலவசமாக நிலமும் மற்றும்
    எல்லா உதவிகளும் இலவசமாக
    அரசே செய்தது.
    * உலகில் எவருக்கும் கடன் படாத
    நாடு லிபியா !!

    ReplyDelete
  11. ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிய காத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.
    நாம் விரைவில் பணி நியமனம் பெறுவது உறுதி தான்,
    ஆனாலும் அது எப்போது என்பது பெரிய கேள்விக்குறியே,,,,,,,
    நாம் பல இடங்களில் சிதறிக்கிடப்பதாலும், பல சூழல் நம்மை ஒன்றிணைய பெரிய சவாலாக இருப்பதாலும்,,, நாம் அதிகாரிகளின் சிந்தனையில் சிறிதும் இல்லை என்பதே நமக்கு பல நிலையாக உணர்த்துகிறது,,,,
    அதிஷ்டவசமாக நம்முள் சிலர் ஒன்றிணைந்து சென்று கேட்டாலும் நமக்கு சிறப்பான வழிகளில் பதில்களை மட்டுமே தர தயாராக இருக்கிறார்களே தவிர,,,,,,,,,,,,,,,,,, பணி நியமன நடவடிக்கை எட்டியதாக இன்று வரை தெளிவில்லை
    இருந்தும் காத்திருங்கள் நிச்சயம் பணி நியமனம் நமக்கு நடக்கும்

    காத்திருங்கள்

    முடிந்தால் ஒன்றிணையுங்கள்

    நாளை நமதே ,,,,,,,,,, நாளை நமதே ,,,,,,,,,,

    ReplyDelete
  12. Libiya polla Tamil Nadu Varuma frds

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி