புதுடில்லி:
திட்டக்குழுவுக்கு மத்திய அரசு, நீத்தி
ஆயோக் என புதுப் பெயரை
சூட்டி உள்ளது. இதற்காக, கடந்த
1950ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டத்தில்
மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டக்குழுவிற்கு புதிய பெயர் மாற்றப்பட்டுள்ளது
தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும்
என கூறப்படுகிறது.
புதிய பெயர் : முன்னதாக, மோடி அரசு பொறுப்பேற்ற நிலையில், திட்டக்குழு சீரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக டிசம்பர் 29ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து,திட்டக்குழுவிற்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், திட்டக்குழுவிற்கு பதிலாக புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கு காங்கிரசும், திரிணாமுல் காங்கிரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் பலவித எதிர்ப்புக்களை மீறி திட்டகமிஷனுக்கு மாற்றாக புதிய அமைப்பை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பையும் புத்தாண்டு தினத்தில் அறிவித்துள்ளதால் கடந்து சென்ற 2014ம் ஆண்டிற்கு மட்டுமல்ல, திட்டகமிஷனுக்கும் "பை...பை" சொல்லப்பட்டுள்ளது.
திட்டகமிஷன் வரலாறு : மாநிலங்களின் வளர்ச்சி பணிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதிகளை, குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்து ஒதுக்கீடு செய்வதற்காக 1950ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சி காலத்தில் திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. ஐந்தாண்டு திட்டங்களுக்கான நிதிகளை ஒதுக்கும் பணிகளை மேற்கொண்டு வந்த திட்டக்குழுவின் தலைவராக பிரதமர் இருந்து வந்தார். துவக்கத்தில் ஐந்தாண்டு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பணிகளை மேற்கொண்டு வந்த திட்டக்குழு, 1990க்கு பிறகு மத்தியில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக ஒவ்வொரு ஆண்டுக்கான நிதிகளை ஒதுக்கும் பணிகளையும் செய்து வந்தது. மத்திய அமைச்சர் அந்தஸ்து கொண்ட திட்டக்கழு துணைத் தலைவரையும் திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து வந்தனர். பொருளாதாரம், தொழில்துறை, அறிவியல், பொது நிர்வாகம் உள்ளிட்ட சில முக்கிய துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும், அமைச்சகங்களும் திட்டக்குழு உறுப்பினர்களாக இருந்து வந்தனர். மேலும் நிதி, வேளாண், உள்துறை, சுகாதாரம், ரசாயன மற்றும் உரம், தகவல் தொழில்நுட்பம், சட்டம், மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளின் அமைச்சர்கள் மற்றும் திட்டக்குழுவிற்கான இணையமைச்சர் ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக அங்கம் வகித்திருந்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி