வாட்சிம் கார்டு அறிமுகம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2015

வாட்சிம் கார்டு அறிமுகம்!


150 நாடுகளில் ரோமிங் கட்டணமின்றி வாட்ஸ் அப்பை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு அறிமுகம்
உலகின் 150 நாடுகளில் ரோமிங் கட்டணம் ஏதுமின்றி ‘வாட்ஸ்அப்’ சேவையை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைதளமான வாட்ஸ் அப்-க்கு உலகெங்கும் 700 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில், அவர்களுக்காக தற்போது வாட்சிம் என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது இத்தாலியை சேர்ந்த ஜீரோ மொபைல் நிறுவனம்.

இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மனுவல் ஜினுல்லா கூறுகையில், “இந்த சேவையின் மூலம் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ளும் போது அதிக அளவிலான ரோமிங் கட்டணங்கள் செலுத்தவோ, இலவச வை-பை கிடைக்கும் இடத்தை


தேடி அலையவோ தேவையில்லை. வாட்சிம்மை பயன்படுத்தி 150 நாடுகளில் வாட்ஸ் அப்பை எல்லையின்றி உபயோகித்து நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கலாம்” என்றார்.

இந்த வாட்சிம்மின் விலையாக 10 யூரோவும் (சுமார் 714 ரூபாய்) உலகம் முழுவதுற்கும் அனுப்பி வைப்பதற்கு ஒரே கட்டணமாக 5 யூரோவும் (சுமார் 350 ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிம் கார்டை பெறவும் ரீசார்ஜ் செய்யவும் வாட்சிம் நிறுவனத்தின் இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த சிம் கார்டை, உள்ளுர் விநியோகஸ்தர்கள் மூலம் 100 நாடுகளில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஜீரோ மொபைல் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி