சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்-அமைச்சர் பதவியை இழந்தார். அவர் வகித்து வந்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியும் காலியாக இருக்கிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டார். அப்போது அவரிடம் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷன் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம். அனேகமாக, டெல்லி சட்டசபை தேர்தல் அறிவிப்போடு ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தேதியும் வெளியாகலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-வது அல்லது 3 வாரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்தவாரம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.டெல்லி சட்டசபை தேர்தலுடன் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்படும்என்று கூறப்படுவதால் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் தேதியும் அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி